Thursday, 7 March 2013

சொல்வதெல்லாம் உண்மை - 2நிருபர்: மேடம் நாங்க “மாக்கள் டி.வி யில இருந்து வர்றோம், உங்களை பேட்டி எடுக்கறதை ரொம்ப பெருமையா நினைக்கிறோம்… வணக்கம் மேடம்”

ராஜி: ம்ம்ம், என்னங்க, எல்லா சேனல்காரங்களும் ஒண்ணா வர மாட்டீங்களா, எத்தனை பேருக்கு தான் தனித்தனியா பேட்டி கொடுக்கறது…..

நிருபர்: மேடம், மத்தவங்கள்ளாம் ஜஸ்ட் பேட்டி எடுக்க தான் மேடம் வந்திருப்பாங்க, பட், ஆனா, இது ஒரு லைவ் ஷோ, ப்ளீஸ் மேடம் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க….

ராஜி: (சற்று யோசித்து…) ஓ.கே சீக்கரம்… 1/2 மணி நேரத்துல முடிச்சுடுங்க… புஷ்புவை கூப்டுட்டு ஷாப்பிங் போணும்.

(கேமரா 1, ரெடி, ஸ்டார்ட், ஆக்‌ஷன்…. )

நிருபர்: வணக்கம் நேயர்களே! இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியோட சிறப்பு விருந்தினர் , தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்குன zee tv புகழ் ராஜி @ ராஜேஸ்வரி. அவங்களை நாம மீட் பண்றதுக்கு முன்னாடி ஒரு குட்டி ப்ரேக்!
நிருபர்: வெல்கம் பேக் டு “சந்திப்போம், சிந்திப்போம்”
-    என்னது சந்திப்போம், சிந்திப்போமா…. என்னாங்க டைட்டில் இது அசிங்கமா?
நிருபர்: மேடம், சிந்திப்போம்னா அந்த சிந்திப்போம் இல்லைங்க மேடம்… இது யோசிக்கிறது….
-    ஓகோ… ஓகே ஓகே

நிருபர்: சொல்லுங்க மேடம், இவ்வளவு புகழையும் நீங்க ஒரு டி.வி ப்ரோக்ராம்ல வந்தது மூலமா அடைஞ்சிருக்கீங்க… அது பத்தி என்ன நினைக்கிறீங்க….
-    உண்மையிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு, எங்க போனாலும், என்னை அடையாளம் கண்டுக்கிறாங்க, ஜீ டி.வி ராஜி ஜீ டி.வி. ராஜின்னு ஓடி வந்து ஆட்டோகிராப் கேக்கறாங்க… இது எல்லாத்துக்கும் காரணம் ஜீ டி.வி தான். அவங்களுக்கு இந்த நேரத்துல நான் நன்றி சொல்லிக்கிறேன்.
நிருபர்: ஆனா, அவங்க உங்களை பயங்கரமா அசிங்க படுத்தி அனுப்பியிருக்காங்க, அப்ப கூட நீங்க நன்றி சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு…!
-    பின்ன என்னங்க, அவன் அவன் பேமஸ் ஆகறதுக்கு எவ்வளவு கஷ்டபடறான், சினிமா சான்ஸ் கேட்டு அலையறான், அசிஸ்டன்ட் டைரக்டரா சுத்தறான், ஜிம்முக்கு போறான்… ஆனா இதுல எந்த கஷ்டமுமே படாம, வெறும் புஷ்புவோட பழகினதுக்கு மட்டுமே நான் இவ்வளவு பேமஸ் ஆயிருக்கேன்னா அதுக்கு ஜீ. டி.வி தானே காரணம்.
நிருபர்: ஓகே நேயர்களே நிகழ்ச்சியை தொடர்ந்து பாருங்க , குட்டி பிரேக்…
..
..
நிருபர்: ஜீ டி.வி யில அவ்வளவு பஞ்சாயத்து பண்ணியும், புஷ்பராஜை அவங்க குடும்பத்தோட அனுப்புனதுக்கு அப்பறமும், நீங்க ஏன் மேடம் புஷ்பராஜை கூட்டிட்டு ஓடுனிங்க…?
-    என் புருஷன் சொல்லியே கேட்கலை. பிஸ்கோத்து அவ சொல்லி நான் கேட்டுடுவனா… நான் வழக்கம் போல என் வூட்டுக்காரனான்ட வூட்ல சண்டை போட்டுனுக்கும் போது, அந்த வழியா போன 2 பேரு எங்க வூட்டுக்குள்ள வந்துட்டாங்க… பாவம் நான் விட்டெறிஞ்ச பூரிக்கட்டை வந்தவன் ஒருத்தனோட மண்டைல பட்டுடுச்சு, ஆனா அதை பத்தியெல்லாம் கவலைப்படாம, அந்த தம்பிங்க தான், நீங்க நல்லா சண்டை போடுவீங்களா, எங்களுக்காக எங்க டிவி ஷோவுல வந்தும் சண்டை போட முடியுமான்னு கேட்டு, கைல அட்வாண்ஸை கொடுத்துட்டு கேட்டுச்சுங்க, தம்பிங்க அன்பா சொன்னதால கேட்டு தான், நிகழ்ச்சிக்கே போனேன்… அதுக்கப்பறம் பார்த்தா, நான் பெரிய லெவல்ல பேமஸ் ஆய்ட்டேன். ஏதோ பேஸ் புக்ல என் பேர்ல ‘பேஜ்’ ஆரம்பிச்சிருக்காங்களாமே… அதுல 25000 பேருக்கு மேல சேர்ந்துட்டாங்களாமே… கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
நிருபர்: ஏங்க மேடம், நிகழ்ச்சியில ரொம்ப அழுதுட்டீங்க, நீங்க அழறதை பார்த்துட்டு நாங்கல்லாம் ரொம்ப தவிச்சு போய்ட்டோம்….
-    அதுவாப்பா….
நிருபர்: மேடம், மேடம் ஒரு நிமிஷம் மேடம், நேயர்களே குட்டி பிரேக்குக்கு அப்புறம் மீண்டும் சந்திப்போம்….
..
..
-    அது வந்துப்பா… நான் ஏன் அழுதேன்னா,…
நிருபர்: அதை விடுங்க மேடம், உங்க கணவர் சந்தேகப் பட்டாரு, சந்தேகப் பட்டாருன்னு சொல்றீங்களே, நீங்க தான் உண்மையிலே புஷ்பராஜோட இருந்தீங்களே, அப்புறம் எப்படி மேடம் அவர் மேல தப்பு இருக்க முடியும்….அவரு உங்களை கரெக்ட்டா தான சந்தேகப் பட்டாரு?
-    நான் புஷ்பராஜோட இருந்தேனோ இல்லையோ. அதை எப்படி பா அவரு சந்தேக படலாம். இப்படி சந்தேக படற புருஷனோட வாழ முடியுமா, அதனால தான் அந்தாளை அத்து வுட்டுட்டு, என் புஷ்புவோட வந்துட்டேன்.
நிருபர்: இவ்வளவு புகழ் கிடைச்சதுக்கு அப்புறம், நீங்க மேற்கொண்டு என்ன மேடம் பண்றதா இருக்கீங்க…?
-    எல்லாரும் கட்சி ஆரம்பிக்கறதை பத்தி யோசனை சொல்றாங்க… அப்படி ஆரம்பிச்சுட்டா புஷ்புவோட இருக்க முடியுமான்னு தான் தெரியலை. பார்ப்போம், எல்லாம் கடவுள் விட்ட வழி.
நிருபர்: ஓ… ரொம்ப நல்ல விஷயம் மேடம்….
-    அது மட்டுமில்லாம, என் வாழ்க்கை சரித்தரத்தை புத்தகமா வெளியிடலாம்னு இருக்கேன்.
நிருபர்: இது இன்னும் ரொம்ப நல்ல விஷயம் மேடம்…
-    ஹி ஹி… நன்றி தம்பி…
நிருபர்: நேயர்களே, ஒரு குட்டி..
-    தம்பி, மறுபடியும் ப்ரேக்கா…. ஏன் பா இப்படி பண்ற… சீக்கரம் அனுப்பிச்சு விடுப்பா…
நிருபர்: ஹி ஹி… மேடம்… லாஸ்ட்டு பிரேக் மேடம்…
-    க்கும்…
நிருபர்: ஒரு குட்டி பிரேக் நேயர்களே!
..
..
நிருபர்: அப்புறம் கடைசியா சில கேள்விகள், நீங்க ஜீ டிவிக்கு எதுக்காக போனீங்க…
-    பஞ்சாயத்துக்கு
நிருபர்: பஞ்சாயத்துக்கு முன்னே நீங்க யாரோட இருந்தீங்க…
-    வூட்ல என் வூட்டுக்காரனோட, சைட்ல புஷ்ஷோட…
நிருபர்: என்னது புஷ்ஷா?
-    அட புஷ்பு பா…
நிருபர்: பஞ்சாயத்துக்கு அப்பறம்….?
-    மொத்தமா புஷ்ஷோட…
நிருபர்: பஞ்சாய்த்துக்கு முன்னே நீங்க வீட்டுக்காரரோட எப்படி இருந்தீங்க?
-    சண்டை போட்டுகினு கிடந்தோம்.
நிருபர்: இப்ப?
-    இப்பயும் எப்பனா பார்த்தா சண்டை போட்டுகினு தான் கீறோம்.
நிருபர்: அப்புறம் எதுக்கு மேடம் பஞ்சாயத்துக்கு போனீங்க?
-    என்ன பா, இப்படி கேட்டுட்ட, பேமஸ் ஆக வேணாமாப்பா… அதுவுமில்லாம மொத்தமா புஷ்பு நம்ம கைக்கு வந்தாச்சுல்ல…. இதெல்லாம் பெருமை இல்லையா…

No comments:

Post a Comment