Monday, 28 April 2014

Tenaliraman Movie review


படம் சூப்பர்.

விவாதிக்கவோ, விமர்சிக்கவோ பெரிதாக ஒன்றும் இல்லை. படத்தில் புரட்சி எல்லாம் வருகிறது. அது மட்டுமில்லாமல் எந்தெந்த மினிஸ்ட்ரி எப்படி செயல்பட வேண்டும் என்று சீரியஸாக அட்வைஸ்கள் எல்லாம் தூள் பறக்கிறது. எல்லாமே மேலோட்டமாக அள்ளி தெளித்து அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான படம் என்பதால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, யாரும் எதையும் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை.

படத்தில் வரும் தெனாலிராமன் கேரக்டரை விட, மன்னன் கதாபாத்திரம் தான் எதார்த்தமாகவும், போலித்தன்மை இல்லாமலும் இருக்கிறது. அதனாலேயே அந்த கதாபாத்திரம் மனதில் நிற்கும் அளவிற்கு வெகுவாக கவர்கிறது. இத்தனைக்கும் மன்னன் பேர் கூட கடைசி வரையில் சொல்லப்படவில்லை, அதை பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

நீதிக்கதைகள், திருக்குறள் கதைகள் எல்லாம் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கின்றன. அதன் வர்த்தக பாணியை அழகாக பின்பற்றி இதிலும் கூட, சில தெனாலிராமன் கதைகளை காட்சி படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் பாராட்டுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமா நாயகிகளை தான் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. வடிவேலு, விஜயகாந்த், டி.ராஜேந்திரன் போன்ற ஹீரோக்களை துரத்தி துரத்தி காதல் கொள்கிறார்கள். விட்டால் கற்பழித்தே விடும் அளவிற்கு ஓவர் ரொமான்ஸ் செய்து ஹீரோக்களை மகிழ்விக்கிறார்கள். ஆனால் ஆர்யா, சித்தார்த், ஜீவா போன்ற அழகு ஹீரோக்களை மட்டும் அலையோ அலை என்று அலைய வைக்கின்றனர். நாட்டில் அழகாக பிறப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

படத்தின் செட், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு என்று அனைத்து தரப்பினரும் பழங்காலத்து மன்னர் வாழ்க்கையை காட்சிப்படுத்த இயன்ற வரை முயன்று இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக இது போதாது. இவ்வளவு டெக்னாலஜிகளையும், டெக்னீஷன்களையும் வைத்திருக்கும் கோலிவுட், இன்னமும் நம்பும் படியான மன்னர் காலத்து வாழ்க்கையை காட்சிப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. செலவு அதிகம் பிடிக்கிறது. அதை நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் வேண்டும் என்பதே என் கருத்து. ஒருவர் விடாமல் எல்லோரும் புத்தம் புது ஆடைகளை அணிந்து வலம் வருவதும், அரண்மனை முழுதும் டெம்ப்ளேட்டாக சுத்தமாக இருப்பதும் ரொம்பவே உறுத்துகிறது.

D.இமான் என் ஹீரோ, இப்போதைய ட்ரெண்டில் இமான் தான் டாப் என்பது என் கருத்து. 'ஏலே ஏலே மருது' பாட்டெல்லாம் என் மனதிற்கு அத்தனை நெருக்கமானவை. இந்த படத்தின் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றி விட்டது தான் என்றாலும், பழங்காலத்து கதை என்பதால் நிறைய கட்டுப்பாடுகள் கழுத்தை நெரித்திருக்கும் என அவதானிக்கிலாம். ஒவ்வொரு முறை சரணம் repeat ஆகும் போதும், தபேலாவின் தாளத்தில் ஏதேனும் வித்தியாசம் காட்டும் பழங்கால டெக்னிக்கை இதில் பயன்படுத்தி இருப்பதை ரசிக்க முடிகிறது. அது மட்டுமே ரசிக்கும் வகையில் இருப்பது தான் சோகம்.

கல்லா கட்டுமா கட்டாதா என்ற பீதியிலே ஸ்க்ரிப்ட் அமைத்திருப்பது நன்கு புரிகிறது. இத்தனைக்கும் இம்சை அரசன் படத்தை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் ஸ்க்ரிப்டில் இத்தனை ஓட்டைகள் என புரியவில்லை. மன்னர் 10 நாட்கள் மக்களோடு மக்களாக வாழ்வதை காட்டுகிறார்கள். நாள் 1 என சொல்லி சில காட்சிகளை காட்டுகிறார்கள். அதன் பின் அந்த கண்ட்டினுயேஷனையே காணோம். நாள் 5 க்கு தாவி விடுகிறார்கள். இதற்கு எதற்கு கஷ்டப்பட்டு எத்தனையாவது நாள் என்று காட்டவேண்டும். யார் கேட்டார்கள் ?

மன்னருக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய அரசவையிலும், நாட்டிலும் என்ன பிரச்சினை என்று தெரிந்த பின்னரும், ஏன் மன்னர் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்? 10 நாள் கணக்கு முடிய வேண்டும் என்றா? உண்ணாவிரதத்தில் ஒருவரது உயிர் போகும் நிலையிலும் கூட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் ரகசியம் புரியவில்லை.
இந்த அளவு ஓட்டை ஒடசலான ஸ்க்ரிப்ட்டையும் தாங்கி பிடிப்பதும், ரசிக்க வைப்பதும் One & only வடிவேலு மட்டுமே.

கோலிவுட்டின் பல பிரதான character artistகளை சின்னதும் பெரிதுமாக ஒரு ரவுண்டு வர வைத்திருக்கிறார்கள். இது நிச்சயம், வடிவேலுவின் அக்கறையாக தான் இருக்கும்.

ஆரூர்தாஸ் வசங்களில் வடிவேலு ஆதிக்கம் செய்யும் இடங்கள் உண்மையிலே வெறி கொண்டு சிரிப்பை வரவைப்பவை. "உன் அம்மாக்களில் 3 பேருக்கு இடுப்பு வலியாம், போய் பார்த்து விட்டு வருகிறேன்" என்று அந்தபுரத்திற்கு கிளம்பும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

தெனாலிராமன் போன்ற படங்களை நிச்சயம் வரவேற்கலாம் என்று தான் நினைக்கிறேன். பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றிய படமெடுத்தால் பார்க்க ஜாலியாக தான் இருக்கிறது. வெவ்வேறு பரிணாமங்களை பார்க்க சுவாரஸ்யமாகவும் இருக்கும். சமகால அரசியலை மறைமுகமாக தாக்கி டார்ச்சர் செய்யாமல் இருந்தால் சரி.

ஆன்னா ஊன்னா புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்றால் கேட்பதற்கே போரடிக்கிறது.


No comments:

Post a Comment