Tuesday, 10 January 2012

Women, the infinite

            பெண் என்பதற்கு 'பேண்' என்பது பொருள். பேண் என்றால் விரும்பு என்று அர்த்தம் தருகிறது. பெண் என்பவள் எப்பொழுதும் எல்லார்க்கும் விருப்பமானவளாகவே இருக்கிறாள். எனவே , பெண் என்ற மேன்மையான பெயரை எவ்வளவு சரியாக நம்மை பேணுபவளுக்கு நாம் அளித்திரிக்கிறோம்.
  
           தாய் நாடு என்பது தான் எல்லா உலக நாடுகளிலும் வழக்கில் இருப்பவை. இதில் பிரான்ஸ் மட்டுமே விதி விலக்கு. சரித்திரத்திலும் , தமிழ் கலாச்சாரத்திலும்  பெண்ணின் பெருமைகள் கடல் போல் குவிந்து கிடக்கிறது .

          நம் தமிழ் கலாச்சாரத்தில் சந்நியாசம் என்பது ஒரு முக்கிய பகுதி , ஒரு ஆண் சந்நியாசம் எடுத்து விட்டால், அதன் பிறகு அவனது மகனோ மகளோ, அவனை தந்தையாக விழுந்து தொழுதல் கூடாது , அது பாவம் . ஆனால் ஒரு பெண் சந்நியாசம் எடுத்து விட்டால் , அவளின் பிள்ளைகள் அவளை தொழலாம் , அது பாவமாகாது, மாறாக தொழாமல் போனால் தான் பாவம் .

         சிவனுக்கு ஒரு சிவராத்திரி போல , சக்திக்கு 9 ராத்திரிகள் உண்டு , அதுவே நவராத்திரி . சிவராத்திரியில் சாப்பிட ஒன்றும் கிடைக்காது , வெறும் சுண்டல் மட்டுமே . ஆனால் நவராத்திரியில் நம் சக்திதேவி நம்மை பட்டினி போடுவாளா ... ஒவ்வொரு நாளும் பல வகையான பலகாரம் பரிமாறுவாள் . பெண் இல்லாத உலகம் என்றோ அழிந்திருக்கும் , ஏனென்றால் அன்பு என்றோ நிலைகுழைந்து அழிந்திருக்கும் .எந்த வகையில் வேண்டுமானாலும் ஆய்வு செய்து கொள்ளுங்கள் , அன்பு என்பதை ஆண் தாயிடமிருந்து தான் கற்கிறான் , தந்தைடமிருந்து அவன் கற்பதின் பெயர்  பாசம்.   

        "உத்தமமான பத்தினி இருந்தால் பேறு வேறு ஏதுமில்லை" என்கிறது சான்றோரின் வாக்கு, நம் இந்திய தேசம் முழுக்க பத்தினிக்கு எடுத்துகாட்டாய் பல கோடி மக்கள் இருக்கிறார்கள் . அதுவே நம் பாரத தேசத்தின் பெருமை.

       "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " இது பழமொழி , இது பல ஆண்டுகளை வேறு பரிமாணத்தில் சித்தரிக்க பட்டு வருகின்றது , ஆனால் இது சொல்வது யாவெனில் , வீடு ஆவதும் பெண்ணாலே வீட்டிற்கு வரும் கஷ்டங்கள் அழிவதும் பெண்ணாலே .

        இதற்கு சான்றாய் என்னால் 2 சரித்திர நிகழ்வை சொல்ல முடியும் , அரிச்சந்திரன் மிகுந்த கடன் தொல்லையால் வருத்த பட்டு கொண்டிருந்த வேளையிலே ,அவன் மனைவியான சந்திரவதி தன்னை விற்று கடன் தீர்த்து கொள்ள முன் வருகிறாள் . அவன் ஏலம் போட்டு விற்ற அந்த இடம் இன்றும் காசியில்  அரிச்சந்திர பஜார் என்ற பெயரில் இன்றும் நிலைத்து நிற்கிறது . மற்றொன்று சாவித்திரியின் கதை , சாவித்திரியின் கணவன் சத்தியவாணனை எமதர்ம ராஜா காலம் முடிந்ததால் பாச கயிறு போட்டு இழுத்து கொண்டார் , சாவித்திரி எமனிடம் போய் கதறி அழுதால் , எமன் "நீ உன் கணவனை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் , தருகிறேன் " என்றார் . எனக்கு வேறு எதுவும் வேண்டாம் ஏன் கணவன் மட்டுமே வேண்டும் என்று பிடித்த பிடியாய் இருந்தாள் , எமன் தொடர்ந்து நிராகரிக்கவே சாவித்திரி தனக்கு சந்தானம் (பிள்ளை) வேண்டும் என்று கேட்கவே , எமன் திணறி பொய் அவள் கணவனை உயிர்பித்ததாய் வரலாறு .  


         பெண் அறிவு நுண் அறிவு என்பதற்கு மற்றும் ஓர் எடுத்துகாட்டை பாருங்கள் .. ஒரு பெண்ணின் கணவரை ஓர் அரசர் குற்றவாளி என்று தவறாக  கைது செய்து விட்டார் .இவளும் சொல்லி புரிய வைக்க பார்த்தாள் , ஆனால் பயனில்லை , அரசர் முடிவாக அந்த பெண்ணின் கணவர் குற்றவாளியா இல்லையா என்பதை சீட்டு குலுக்கி போட்டு பார்க்க சம்மதித்தார் , அரசர் வஞ்சகமாய் இரண்டு சீட்டுகளிலும் குற்றவாளி என்று எழுதி குவளையில் போட்டார் , இதை கிரகித்து கொண்ட அந்த பெண், தானே சீட்டு எடுப்பதாக முன் வந்து ஒரு சீட்டை எடுத்து வாயில்  போட்டு கொண்டாள். "தன கணவன் குற்றவாளி என்பதை நானே எப்படி படிப்பது , நான் எடுத்த சீட்டின் எதிர் பதமான சீட்டு தான் இதோ இருக்கிறதே , இதில் என்ன இருக்கிறதோ , அதன் எதிர் பதத்தை தான் நான் எடுத்து இருக்கிறேன் " என்று சமர்த்தாய் சொன்னாள். அதில் குற்றவாளி என்று இருக்கவே அரசர் வேறு வழி இல்லாமல் அவள் கணவனை விடுதலை செய்தான் .
        இவை அனைத்தும் கடந்த காலம், நிகழ் காலத்தில் நான் பார்க்கும் பெண் மேலும் மேன்மையான குணத்தை பெற்று இருக்கிறாள் என்பேன் ! ஆனால் அவளின் குணத்தை ஆண் வர்க்கம் தனக்கு சாதகமாய் பயன் படுத்தி கொள்கிறது என்பது வருத்தத்துக்குரிய விஷயமே ! மேலும் அதை யாரும் போற்ற ஆளில்லை . கற்போடு இருப்பதும் , கணவனுக்காக செருப்பாய் தேய்வதும் அவளின் கடமையாய் பார்க்கும் அளவுக்கு ஆண் வர்க்கம் அவளை அடிமை படுத்துகிறது. மறு புறம் அவள் நசுக்கப்படுவது அவள் உணார்ந்தலும் அதற்காகவே பிறந்தவள் போல் ஏற்று கொள்கிறாள் . அதுவும் அவள் மேன்மையான குணத்தில் ஒன்று .

        ஒரு திங்கள் கிழமை இரவு ஒன்பது மணியளவில் கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில் வேளச்சேரி பேருந்துக்காக காத்து கொண்டு இருந்தேன். ஒரு 24  வயது மிக்க ஓர் ஆள் , ஒவ்வொரு  பேருந்து வந்து நிற்கும் போதும் செக் போஸ்ட் போகுமா , செக் போஸ்ட் போகுமா என்று கேட்ட வண்ணம் இருந்தார் , அந்த நேரம் பார்த்து 45B பஸ் வரவே ஒரு 35 வயது மிக்க ஓர் பெண் அந்த பஸ் போகும் என்று அவர்க்கு உதவி செய்தார் .உண்மையில் அந்த பஸ் செக் போஸ்ட் செல்வது இல்லை . சொன்னவுடன்  உடனே அந்த ஆள் பஸ்ஸை நோக்கி ஓடினார் , பின்பு திரும்ப வந்தார் , முகம் சற்று கோபமாகவே இருந்தது, " நன் உனக்கு என்னடி பண்ணேன் , அந்த பஸ் செக் போஸ்டே போகாது , உன்னை யாராவது கேட்டாங்களா ??" என்று கேட்க எங்கள் எல்லார்க்கும் அப்போது தான் அவன் குடித்து இருக்கிறான் என்ற விஷயமே தெரிந்தது , பாவம் அந்த பெண்ணிற்கும் ரேஸ் கோரஸில் 3 டாஸ்மாக் இருப்பது தெரிந்திருக்க வைப்பு இல்லை , அந்த பெண் மிரண்டு போய், தான் தெரியாமால் சொல்லி விட்டதாகவும் மன்னிக்கும் படியும் கேட்டு கொண்டாள். ஆனால் நிலைமை சற்று கொஞ்சம் கை மீறியது " 5A மட்டும் தான் போகும் அது கூட தெரியாம ஏன் சொல்ற ? " என்று கை ஓங்கவே மக்கள் அனைவரும் பாய்ந்து தடுக்க வேண்டியது ஆயிற்று , அந்த பெண்ணை மிக மோசமாய் திட்ட ஆரம்பித்து  விட்டான் , அதற்கு மேல் அந்த பெண் அங்கு நிற்க முடியாமால் ஆட்டோ பிடித்து சென்று விட்டாள். அந்த பெண் செய்தது இரண்டே தவறு தான், ஆணுக்கு உதவியது மற்றொன்று பெண்ணாய் பிறந்தது.  அதன் பிறகு அவன் 54 பஸ்ஸை 5A என்று தவறாய் நினைத்து பூந்தமல்லி பஸ்ஸில் ஏறியது வேறு கதை.

         குடிக்கும் கணவன் , ஊதாரி கணவன் , அடிக்கும் கணவன் இதில் எந்த வகை கணவனாய் இருந்தாலும் அவனை அனுசரித்து குழந்தைகளை திறம்பட வளர்க்கும் பெண்களும் , கணவன் இறந்த பின்பும் சமுதாயத்தில் போராடி குழந்தைகளை அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்க்கும் பெண்களும் , பெற்ற  பிள்ளைகள் புறக்கணித்த பின்பும் அவர்கள் மேல் அன்பை அள்ளி தெளிக்கும் பெண்களும் , தம்மை மதிக்காத பிள்ளைக்கும் பிடித்ததையே சமைத்து தரும் பெண்களும் இருக்கும் வரை உலக அச்சாணி அற்று போகாமல் சுற்றும் . என் காலத்து பெண்கள் புராண காலத்து பெண்களை காட்டிலும் மேல் என்பேன் !

      என் தோழி ஒருத்தி , நான் முதுகு வலியால் துடித்து கொண்டும் அழுது கொண்டு இருக்கும் பொழுது என்னை பார்க்க வந்தாள். வந்தவள் ஆறுதல் சொல்லாமல் என்னை பார்த்தும் ஆண் வர்க்கத்தை பார்த்தும் கோவமாக பேச ஆரம்பித்து விட்டாள் "முதுகு வலிக்க இப்படி துடிக்கற ? நீங்க எல்லாம்  என்ன வலி தாங்கறீங்க ! ஒரு பெண் ஆயுசுக்கும் எவ்ளோ வலி தாங்கற தெரியுமா ?  வலிச்சா பொறுத்துக்கோ " என்று பொரிந்து தள்ளினாள். சம வயது பெண் தான் அவள் , ஆனால் அவளினுள் எவ்வுளவு பக்குவம்.


நம் காலத்து பெண்களும் போற்றுதலுக்கு உரியவர்களே ! பெண்ணின் பயணம் முடிவு இல்லாமல் போய் கொண்டு தான் இருக்கும் , அன்பை நோக்கி !

No comments:

Post a Comment