சமீபத்தில்
வந்த திரைப்படங்களில், இவ்வளவு அபார உழைப்பை தாங்கி வந்த திரைப்படம் இதுவாக தான் இருக்கும்,
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றி
கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால், வெறும் அழகு மட்டும் நம்மை திருப்திப்படுத்தாது என்பதற்கு, இரண்டாம் உலகம் ஓர் உதாரணம்.
செல்வ
ராகவனை டைரக்ஷனில் தான் ஆள் கெட்டியே தவிர, ஸ்க்ரிப்ட்டில் ரொம்பவே
தள்ளாடுகிறார், இருந்தாலும் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்தவன் லவ்வரை உஷார் செய்வதையே கதைக்களமாக வைத்து, தான் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், ஒவ்வொரு வெரைட்டி
காட்டுகிறார். படத்தில் ஸ்க்ரிப்ட் தரம் என்ன என்பதனை ஆராய்ந்தால்,
எந்த அளவும் இறங்கி அடிக்கலாம்…
படத்தில்
இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா…
ஆர்யா
சில காட்சிகளில் ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறார், ஆர்யா அழகாக இருக்கிறார் என்பதை தவிர,
அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. படத்தில்
அவருடைய கதாபாத்திரம் என்னவென்றே தெளிவாக சொல்லப்படவில்லை என நினைக்கிறேன்.
முதல் உலகத்தில் வரும் ஆர்யா, ஒரு தீவிர சமூக சேவகனாக
காண்பிக்கப்படுகிறார், ஆனால் எல்லாம் ஒரு 5 நிமிடத்திற்கே, அதன் பிறகு சமூக சேவை எல்லாம் என்ன ஆனது
என்று தெரியவில்லை. காதல் வந்ததும் காணாமல் போய் விடுகிறது.
அப்படியென்றால் இந்த படத்தின் வில்லன் யார் என்று பார்த்து கொள்ளுங்கள்.
இரண்டாம் உலகத்தில் வரும் ஆர்யா, வேலைவெட்டி இல்லாமல்
வெட்டியாக ஊர் சுற்றி கொண்டும், அனுஷ்காவும் ரூட் விட்டு கொண்டும்
திரிகிறார், கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, திடீரென்று ஒரு மாபெரும் வீரனாக உருவெடுத்து விடுகிறார். அது எப்படி என தெரியவில்லை… அவ்வப்போது, சில பல காமெடி காட்சிகளை கூட முயற்சி செய்து பார்த்திருக்கின்றனர்,
ம்ஹூம்ம்ம்….
முதல்
பாதியில், மருத்துவர்
அனுஷ்கா இறந்த பின்பு, நாய் ஒன்று மதுபாலக்கிருஷ்ணனை அதாவது ஆர்யாவை
அனுஷ்கா இறந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது, அங்கே சொட்டி கிடக்கும்
ரத்தத்தில் இருந்து செடி ஒன்று முளைக்கிறது. அது எதற்கான குறியீடு
என்று இப்போது வரைக்கும் எனக்கு விளங்கவில்லை. அதன்பின் மதுவின்
அப்பா இறந்து விட்டதாக செய்தி வருகிறது, ஆனால் அவரின் ஈமச்சடங்கிற்கு
போனாரா என்று தெரியவில்லை, இறந்து போன அனுஷ்காவை, சுடுகாட்டை விட்டுவிட்டு கோவா முழுதும் தேடி அலைகிறார்.
படத்தில்
வரும் இரண்டாம் உலகத்தில்,
ஆர்யா அனுஷ்காவை தவிர எல்லாரும் வெளிநாட்டவர்களாக இருக்கின்றனர்,
அதுவும் மொத்த உலகமும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்புலமாக கொண்டுள்ளது
போல் தெரிகின்றது. ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.
இப்படி
ஸ்க்ரிப்ட்டில் எந்த குறுக்கு சந்தில் புகுந்தாலும், நமக்கு அங்கு ஒரு காமெடியான லாஜிக் ஓட்டை காத்து
கொண்டிருக்கிறது. படம் மொத்தமும் மொக்கையாக போகிறதா, சாஃப்ட்டாக போகிறதா என்று கண்டுபிடிக்கவே தனியாக மூளையை போட்டு கசக்க வேண்டியதாய்
இருக்கிறது. ஆர்யாவின் சமூக சேவை என்னவானது, இரண்டாம் உலகத்தின் ஆணாதிக்கம் முடிவிற்கு வந்ததா, அரசன்
தூக்கியெறியப்பட்டானா, இரண்டாம் உலகத்தின் எதிரிகள் அழிக்கப்பட்டனரா…
எதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை. கதாநாயகனும்,
கதாநாயகியும் கல்யாணம் செய்து கொண்டு கஜாகஜா செய்தார்தார்களா, இல்லையா என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அது தான்
கதை,,,
பல பரிமாணங்களை
பார்த்து விட்ட தமிழ் சினிமா,
இந்த படத்தை பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு நமக்கு தந்திருப்பது ஏமாற்றமே
என்றாலும்… படத்தின் சி.ஜி காட்சிகள்,
படத்தின் செட், கேமரா, காட்சி
நேர்த்தி என நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை, அதிலு,ம் சில பாடல்கள் நம் பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படத்தின்
பிண்ணனி இசை மிகவும் ரம்மியமாக இருந்தது. படம் முடித்து வெளியே
வந்ததன் பின்னரும், அதன் பிண்ணனி இசை வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இவ்வளவு
கடின உழைப்பை டெக்னிக்கல் டீம் கொடுத்தும்,
ஸ்க்ரிப்ட் தள்ளாடுவதால் படம் ‘பல்ப்’ வாங்குவது, சோகத்திலும் சோகம்!
இந்த பதிவை
அனுஷ்காவை வைத்து முடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்…
இப்போதிருக்கும்
கதாநாயகிகளில் அனுஷ்காவே முன்னிலை வகிக்கிறார் என்றாலும், தமிழில் இது வரை அவருக்கு
ஏற்ற பாத்திரத்தை எந்த தமிழ் சினிமாவும் தராமல் இருந்தது. ஆனால்,
இரண்டாம் உலகம் நிச்சயம் அவருக்கு ஏற்ற மாஸான ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது.
வெகு நிச்சயமாக, அனுஷ்கா மட்டுமே, இத்தனை நீளமான தள்ளாட்டமான படத்தை பார்க்க வைக்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறார், படத்தின் காஸ்ட்யூம்,
லொக்கேஷன், கேமரா, ஸ்டன்ட்
என ஒவ்வொருவரும் மாய்ந்து மாய்ந்து அனுஷ்காவிற்காகவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
அத்தனைக்கும் அவர் தகுதியானவர் என்பதனை ‘இரண்டாம்
உலகம்’ மூலம் நிரூபித்தியிருக்கிறார்.
லவ் யூ
அனுஷ்கா….!
No comments:
Post a Comment