Tuesday, 6 January 2015

Top 10 Tamil Cinemas 2014



இந்த வருஷம் என்னையும் மதிச்சு, பத்மநாபன் நாகராஜ் எனக்கு பிடித்த பதிவர்கள் லிஸ்ட்ல என்னை ரெண்டாவதா சொல்லி கௌரவிச்சிருக்காரு, அப்பறம் ராஜராஜேந்திரன் எனக்கு சிறந்த தமிழ் சினிமா விமர்சகர்னு விருது கொடுத்து இருக்காரு (பகிர்ந்து கொள்ளப்பட்ட விருது)…

யோசிச்சு பார்க்கும் போது ’அட… சூப்பருப்பு’னு தோன்றினாலும், இந்த வருஷம் அப்படி என்னா எழுதினோம்னு யோசிச்சா ஜீசஸ் க்ரைஸ்ட்லாம் கண்ணு முன்னாடி வந்து போறாரு… எழுதியே ரொம்ப வருஷம் ஆன மாதிரி ஃபீல் வருது… அதுவுமில்லாம தமிழ் சினிமாவை விமர்சனம் பண்ணதை விட, கழுவி ஊத்தி விமர்சனம் பண்ணவே தகுதியில்லைன்னு ஒதுக்கினது தான் அதிகமா படுது. இந்த திமிரு அடுத்த கட்டத்துக்கு போனதால தான், தமிழ் சினிமாவை பார்க்கிறதையே குறைச்சிக்கிட்டேன். இந்த 2014 வருஷம் முழுக்க, நான் பார்க்காம விட்ட க்ளாஸிக்/ ப்ளாக்பஸ்டர் ஆங்கில/ உலக படங்களையே தேடி தேடி பார்க்க தான் விரும்பினேன். Following, Memento, Fargo, Batman series னு இப்படி தேடி ஓடினேன். அதோட நான் பார்க்காத அனிமேஷன் படமே இருக்கக்கூடாதுங்கற ஒரு நல்ல நினைப்புல வெறி கொண்டு இருக்கிற அனிமேஷன் படத்தையெல்லாம் ரவுண்டு கட்டி பார்த்தேன்.

இன்னமும் டவுன்லோட் பண்ணதை கூட பாத்து முடிக்காத அளவு, வேலை இழுத்து பிடிக்குது. இதுக்கு நடுவுல தமிழ் படத்துல போய் உட்கார்ந்தா, பல்லு நறநறங்குது. படம் முடிச்சு வெளியே வரும்போதெல்லாம், குதிரை ரேஸ்ல பணத்தை விட்டவன் எப்படி வருவானோ அது போலவே வெளியே வரவேண்டியதா இருக்குது.

ஒரு காலத்துல சினிமா பார்க்கறது எனக்கு அடிக்‌ஷனா இருந்தது, அப்பறம் அது ஜாலியாகி, அறச்சீற்றமாகி இப்ப முழுசா எனக்கு அந்நியமே ஆகிடிச்சு.

இதை சொல்றதால நான் ஒன்னும் பெரிய YoYo புடுங்கி கிடையாது. என்னை மதிக்காதவனை நானும் மதிக்கலை. அவ்வளவு தான்.

அதுவும் 2014ல வெளி வந்த சில படங்கள் எல்லாம் ’நம்மளை ஓட்றதுக்காச்சும் எவனாவது படத்துக்கு வருவான்ல’ என்ற நினைப்பில் படம் தயாரிச்சு வெளியிடும் போது, சத்தியமா காண்டேறிடுச்சு.

Businessஆ, Qualityஆ ன்னு வரும்போது 90% தயாரிப்பாளர்கள் Business அ தேர்ந்தெடுக்கும் போது, நானும் அதையே செய்யறேன்னு சொல்லி தான், தமிழ் சினிமாவுக்கு நடுவிரலை உயர்த்தி காட்டினேன். பெரும்பாலான படங்களை பார்க்கலை. பார்த்த படத்துக்கு விமர்சனத்தையும் எழுத பிடிக்கலை. அதுக்கு கூட அந்த படங்களெல்லாம் வொர்த் கிடையாது.

ஓட்றதுக்காச்சும் தியேட்டர் வருவானுங்கன்னு தயாரிச்ச ஓர் படத்தை என்னான்னு நக்கல் அடிக்கறது, என்னான்னு விமர்ஜனம் செய்யறது. செத்த பாம்பை எதுக்கு அடிப்பானேன்னு விட்டுட்டேன்….

அது மட்டுமில்லாம, இன்னும் சில விஷயங்கள் என்னை 2014ல எழுதறதை தடுத்துச்சு…
1)   நிறைய பேர், லைக்குக்காக எழுத ஆரம்பிச்சிட்டாங்க. காலை வணக்கத்துல ஆரம்பிச்சு, எல்லா வணக்கமும் சொல்லி ஃபேஸ்புக்கை போரடிக்கறாங்க.
2)   ராஜேஷ், ராஜ்சிவா போன்ற ஸ்டாண்டார்டா எழுதறவங்க ஸ்டேட்டஸ்களுக்கே லைக் போட தயங்குறவங்க, ஒண்ணுமில்லாத மொக்கை ஸ்டேட்டஸ்களுக்கே 1000 கணக்குல லைக்கை அள்ளி தெளிக்கிறாங்க.
3)   இவனுங்களுக்கெல்லாம் என்னாத்த எழுதி கிழிக்க போறோம்னு ஒரு புடுங்கி ஃபீலிங் வந்தது தான் பெரிய drawback.
4)   Facebook வேற Life வேறங்கறதே சில தேங்காய் எண்ணெய்ங்களுக்கு புரிய மாட்டேங்குது, இங்க எழுதறதையெல்லாம் நேர்ல சொல்லி ஓட்றதா நினைச்சிக்கிட்டு என்னை கெட்ட வார்த்தைல வாழ்த்த வைக்குதுங்க…
5)   பாலிடெக்னிக் காலேஜ் ஸ்டோரிஸ் போதும்னு பட்டுட்டுச்சு, இருந்தாலும் Admissions dutyனு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கட்டுரையை எழுதி முடிக்கலாம்னு காத்துக்கிட்டு இருக்கேன். குறிப்புகளே இன்னும் முடியலை, குறிப்புகள் மட்டுமே 7 பக்கம் தாண்டிடுச்சு.
6)   கொஞ்சம் சோம்பேறித்தனமும் கூட.

2014 ல எனக்கு பிடித்த டாப் 10 திரைப்படம் போடலாம்னு தான் விக்கிப்பீடியாவை ஒரு ரவுண்டு வந்தேன். சதுரங்கவேட்டை மட்டும் தான் தேறிச்சு.

அதனால அதுக்கே முதல் இடம் கொடுக்கறதை தவிர வேற வழியில்லை. மீதி 9 இடமும் காலியாகவே விடறேன்.
பிசாசு படம் நல்லாயிருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனாலும் இன்னும் பார்க்கலை. பார்த்தாலும் இந்த லிஸ்ட்ல மாற்றம் வராதுன்னு நினைக்கிறேன். எனக்கு மிஷ்கின் மேல நம்பிக்கை இருக்கு…





1 comment:

  1. 'பாலிடெக்னிக் காலேஜ் ஸ்டோரிஸ்' சீரீஸ் continue பண்ணுங்க...

    Cheers...

    ReplyDelete