வருடம் முழுவதும்
ஆங்காங்கே புத்தகத் திருவிழாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சென்னை புத்தகத்
திருவிழாவிற்கு மட்டும் ஓவர் ஹைக் கொடுத்து, இந்த புத்தகத் திருவிழாவிற்கு போகாவிட்டால்
தெய்வக்குத்தம் ஆகிவிடும் போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றனர்.
உண்மையில், புத்தகத்
திருவிழாக்களுக்கு இப்படி கனஜோராக பிச்சி அடிச்சி கொண்டு கூட்டம் வருவதற்கு காரணம்,
இங்கு தமிழ்நாட்டில் புத்தகத்திற்கென்று சரியான மார்க்கெட்டிங்கும், Availability-ம்
இல்லை. வேண்டிய புத்தகங்கள் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை, அது ஒன்றே புத்தகத் திருவிழாவிற்கு
இவ்வளவு கூட்டம் வருவதற்கான காரணம். தர்மபுரியில் இருந்து 7 மணி நேரம் பஸ்ஸில் பயணம்
செய்து, நான் வாங்கி வந்த புத்தகங்கள் என்னென்ன என்று பட்டியலிடவே வெட்கமடைகிறேன்.
ஏனென்றால் நான்
வாங்கிய வந்த புத்தகங்கள் எல்லாமே ஸ்டார் வேல்யூ புத்தகங்கள், அதை வாங்கவே 200 கிமீ
பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு சபரிதாஸும் என்னுடன்
பயணமானான்.
எக்ஸைல்,
திரைக்கதை எழுதலாம்
வாங்க,,
நிலவில் மனிதன்,
இறந்த பின்னும்
இருக்கிறோமா,
தாந்தேயின் சிறுத்தை.
இதுவே நான் வாங்கிய
புத்தகங்களின் பட்டியல்… ஒரு புத்தகத் திருவிழாவிற்கு சென்று பிரபலமான புத்தகங்களை
வாங்குவதில் என்ன சிறப்பு இருந்து விடப்போகிறது?
புத்தகத் திருவிழா
போனாலாவது தேடிய புத்தகம் கிடைக்கக்கூடும் என்பது மட்டுமே புத்தகத் திருவிழாவின் ப்ளஸ்
பாய்ண்ட். கோடிக்கணக்கில் புத்தகம் இருப்பதற்காகவெல்லாம் யாரும் அங்கு போவதாற்போல்
தெரியவில்லை. உண்மையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அளவிற்கானும்
புத்தகக் கடைக்கள் இருந்தது என்றால் புத்தகத்திருவிழாவிற்கு இவ்வளவு கூட்டம் வருமா
என்பது சந்தேகமே…?
அதனால், புத்தகத்திருவிழாவிற்கு
கூட்டம் வருவதை பார்த்து மக்களுக்கு நிறைய படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று கணக்கு
போடுவது தவறான கணிப்பாக படுகிறது. வாங்கும் பெரும்பாலானோரும் சமையல் குறிப்பு, வீட்டு
அலங்காரம் புத்தகங்களே வாங்குகின்றனர் என்று நிறைய பேர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதை
வாங்கவே அவர்களுக்கான தளம், புத்தகத் திருவிழாவாக மட்டும் இருக்கிறது. அதுவே உண்மை.
போன புத்தகத் திருவிழாவிற்கு
இந்த வருடம் பரவாயில்லை என்றாலும், கேண்டினின் தரமில்லா மும்மடங்கு விலையேற்றப்பட்ட
உணவு, தண்ணீருக்காக இந்த மூலையில் இருந்து அந்த மூலைக்கு நடக்கும் வேதனை, கால் வலி
எல்லாம் கணக்கில் வைத்து பார்க்கும் போது BAPASI இப்போதைக்கு திருந்துவதாக தெரியவில்லை
என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
நீதிபதி சந்துரு,
தூர்தர்ஷன் சுமந்த் சி ராமன், மனுஷ்யப்புத்திரன், இயக்குனர் ராம் எல்லோரையும் ஆங்காங்கே
தென்பட்டார்கள். மக்கள் யாரும் அடித்து கொண்டு ஓடி ஆட்டோகிராப் போட்டோகிராப் என இம்சை
செய்யாமல் இருந்ததே ஆச்சர்யமாக இருந்தது.
குறிப்பாக காலச்சுவடு
பதிப்பகத்தில் நீதிபதி சந்துரு வரும் போதும் சரி, அவருக்கான இருக்கையில் அவர் போய்
அமர்ந்த போதும் சரி எந்த ஆராவாரமும் இல்லை. எனக்கும் சபரிக்கும் ஆச்சர்யம்னா ஆச்சர்யம்
அப்படி ஓர் ஆச்சர்யம். பிறகு, காலச்சுவட்டின் ஸ்டால் ஊழியர் ஒருவரே, நீதிபதி சந்துரு
வந்திருப்பதை மைக்கில் அறிவித்து, அவரிடம் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்றும்,
ஆட்டோகிராப் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளலாம் என்றும், அவர் எழுதிய கணம் கோர்ட்டார்
அவர்களே புத்தகம் எங்கள் ஸ்டால்களில் விற்பனைக்குள்ளது என்றும் அறிவித்தார். அப்போதும்
கூட்டம் எந்த ஆராவாரமும் இல்லமலே இருந்தது. அப்பறம் தான் தெரிந்தது, அங்கிருந்தவர்களுக்கு
நீதிபதி சந்துரு என்றால் யாரென்றே தெரியவில்லை! வெட்கக்கேடு!
நாங்களாவது போய்
பேசியிருக்கலாம் தான்… ஆனால் என்ன பேசுவது? ஈஈன்னு இளித்து கொண்டு பேசுவதற்கு பதிலாக
பேசாமலே இருந்து கண்ணியம் காத்து கொள்வது எவ்வள்வோ பரவாயில்லை என்று இருந்து விட்டோம்.
யாருக்கு தெரியும், எங்களை போலவே எல்லோரும் நினைத்திருக்கலாம்? அதற்காக ஒருவர் கூட
அவர் மேல் விழுந்து பாயாமல் இருப்பது பிரபலங்களுக்கு செய்யும் அநீதியாகவே படுகிறது.
அடுத்த முறையேனும், ஒரு பிரபலத்தை சந்தித்தால் என்ன பேச வேண்டும் என்று தயார்படுத்தி
கொண்டு செல்லவேண்டும்…
ராஜராஜேந்திரனை
சந்தித்தேன். அவருடன் பேசுவதே மிகவும் ஃப்ரெண்ட்லியாகவும், ஜீனியஸ்டிக்காகவும் இருக்கும்.
அவர் என்னென்ன புத்தகங்கள் வாங்கினார் என்று புத்தக பையை வாங்கி (பிடுங்கி) பார்த்தேன்.
ஜெயமோகன் புத்தகங்கள் மெஜாரிட்டி கண்டன. தஞ்சை பிரகாஷ் நாவலான கள்ளம் இருந்தது. அதை
பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பின், சென்றைய ஆண்டின் சிறந்த திரை
விமர்சகர்க்கான பரிசு 500 ரூபாயை அளித்தார். கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது. என்னை
விட நிறைய பேர் விமர்சனங்களை ஆழமாகவும், ஹ்யூமராகவும் எழுத இணையம் முழுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்.
அதன்பின், செல்வக்குமார்
கணேசனையும், வெற்றிச்செல்வனையும் சந்தித்தோம். மாதொருபாகன் பற்றி பேசி கொண்டிருந்தோம்.
செல்வக்குமார் கணேசன் தான் உரையாடலின் போது ஒரு விஷயத்தை சொன்னார். ஒவ்வொரு ஆயுத பூஜையின்
போதும் காரைக்கால் பேருந்து நிலையத்திலோ எங்கேயோ “ஆயுதபூஜை கொண்டாடும் மடையர்களே, ஆயுதபூஜையின்
போது வேசி எதையடா பூஜை போடுவாள்?” என்று பேனர் அடிக்கிறார்கள், அதையெல்லாம் விட்டு
விடுகிறார்கள், மாதொருபாகனை மட்டும் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் என்று பெருமாள்
முருகனுக்காக வருத்தப்பட்டார்.
சாரு வந்திருந்தார்.
சாருவிடம் ஹாய் சொல்வதற்காக நெருங்கினோம். யாரைப் பற்றியோ யாரிடமோ தீவிரமாக திட்டிக்
கொண்டிருந்தார். திட்டும் போது ’அவன்லாம் தெருநாய், useless’ என்று திட்டி விட்டு
“நான்லாம் தெரு நாயை கூட லவ் பண்றவன், என்ன பண்றது அவனுங்களை அப்படி தான் திட்ட வேண்டியதா
இருக்கு” என்று திரும்ப ஜாலியானார். எனக்கு அதையெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
சாருவை 3 வருடமாகவே பார்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் போரடிக்காமலே இருக்கிறார்.
பார்ப்போம், எப்போது
எனக்கு போரடிக்க போகிறார் என்று?
போய் எக்ஸைல் புத்தகத்தில்
கையெழுத்து கேட்டேன், புன்னகையுடன் கையெழுத்திட்டு கொடுத்தார். சபரியும் சாருவிடம்
கையெழுத்து வாங்குவதற்கென்றே ஒரு புத்தகம் வாங்கி கையெழுத்து கொண்டான். இருவரும், சாருவுக்கு
பாய் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.
அவ்வளவு தான் எங்களுடைய
புத்தகத்திருவிழா…
இதை விடவா ஒரு
Happy ending அமைய முடியும்???
:) எளிமையாக அழகாக எழுதியிருக்கிறீர்கள்... cheers... சந்துரு, சாரு பற்றி அருமை...
ReplyDeleteபை தி வே, 'நிலவில் மனிதன்' யாருடைய, என்ன மாதிரியான புத்தகம்?
சினிமா விமர்சனங்கள் இன்னும் நிறைய உங்க ஸ்டைலில் எதிர் பார்கின்றோம் சீக்கிரம் அப்டேட் செய்யுங்க
ReplyDelete