Monday, 28 April 2014

Other face of Vel tech's


பெரும்பாலான கல்லூரி விடுதிகளில், செல்போன் உபயோகிக்க எந்த தடையும் இருப்பதில்லை. தடைகள் இருக்கும் கல்லூரிகளும், தடையை விலக்கி கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் செல்போன் இல்லாத வாழ்க்கை என்பது நம் நிகழ்கால வாழ்வில் சாத்தியமில்லாதது. இந்த கூற்று உண்மையோ இல்லையோ, அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதாக எல்லோராலும் நம்ப படுகிறது. அதனாலேயே செல்போனுக்கு எதிரான கெடுபிடிகள் கிட்டத்தட்ட அடங்கிவிட்டது.

ஆனால் இன்னமும் சில கல்லூரிகள், தங்களது செல்போன் தடைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலே இருக்கின்றன. நல்லது. அதை பற்றி பிரச்சினை இல்லை. தங்கள் கல்லூரியின் discipline விஷயத்தில் கறாராக இருக்கிறோம் என்று அவர்கள் சொல்லலாம். அவ்வாறு விதிமுறைகளுக்கு மீறி செல்போன் பயன்படுத்தினால் அதை கையகப்படுத்தலாம். கையகப்படுத்திய செல்போனை பின்னர் எச்சரிக்கை செய்து திரும்ப கொடுக்கலாம், அல்லது பெற்றோரை கூப்பிட்டு அவர்களிடமும் ஒப்படைக்கலாம். ஏன், மாணவர்கள் கண் முன்னாலே அதை சுக்கு நூறாக உடைத்தும் போடலாம். அது வரை அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் எந்த அடிப்படையில் மாணவர்களிடமிருந்து கையகப்படுத்திய செல்போன்களில் இருக்கும் தகவல்களை ஆசிரியர்கள் பார்க்க முடியும்? எந்த ஒரு விதியும் அதை அனுமதிப்பதில்லை. அப்படி செய்தால் அது ஒரு தனி மனித உரிமை மீறல். ஆனால் அதை தான் பெரும்பாலான ஆசிரிய பெருமக்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி செய்து வருகிறார்கள்.

பெண்களும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை.

கொஞ்ச நாள் முன்பு நடந்த சம்பவம் இது...

வேல் டெக் குழுமத்தின் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஒரு மாணவியின் பெயர் திவ்யா. இவர் கல்லூரியின் விடுதியிலே தங்கி பயிலும் மாணவி ஆவார். study time ல் மொபைல் வைத்திருந்த காரணத்திற்காக கௌசிகா என்ற ஹாஸ்டல் வார்டன், திவ்யாவின் மொபைல் போனை பறிமுதல் செய்திருக்கிறார். பறிமுதல் செய்து அந்த மொபைலில் உள்ள மெசேஜ்களை படித்து திவ்யாவின் ஆண் நண்பரின் மெசேஜ்களை படித்து, திவ்யாவை தேவையே இல்லாமல் மிரட்டியுள்ளார். திவ்யாவின் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று அச்சுறுத்தி இருக்கிறார். அப்போதே அவளின் பெற்றோரிடம் சொல்லியாவது தொலைத்திருக்கலாம். அங்கேயே விஷயம் முடிந்திருக்கும். இந்த விஷயத்தை சுஜாதா என்னும் தலைமை வார்டன் காதுகளுக்கு எடுத்து சென்று அச்சுறுத்த பட்டிருக்கிறார்.

அடுத்த நாள் காலை அந்த மாணவி கல்லூரி கிளம்பும் போதும் சுஜாதா அவரை வழிமறித்து, "நீயெல்லாம் காலேஜுக்கு போய் என்ன பண்ண போற?" என்ற ரீதியில் அம்மாணவி அவமானப்படும் வகையில் மாணவிகள் முன்னிலையில் திட்டி, திரும்ப ஹாஸ்டலுக்கு அனுப்பியுள்ளார். ஹாஸ்டலுக்கு திரும்பிய திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் திவ்யா தனது துப்பட்டாவை பயன்படுத்தி தான் தூக்கு போட முயற்சித்திருக்கிறார். ஆனால் அது அறுந்து விழுந்து இருக்கிறது. நியாயமாக, அப்போதே அந்த மாணவிக்கு உயிர் பயம் வந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், திரும்பவும் எங்கயோ சேலையை தேடி பிடித்து தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இத்தனைக்கும் திவ்யா ஒரு முதலாம் ஆண்டு மாணவி, செத்து மடிந்து இவ்வுலகில் இருந்து தப்பிக்க அவ்வளவு தீவிரம் காட்டியிருக்கிறாள்.

அதன்பின் எல்லாமே வழக்கமான நாடகங்கள் தான்...

post-modem report ல் பெண்ணின் நடத்தை குறித்து மருத்துவர்கள், இழிவான ரிப்போர்ட் கொடுத்து அதன் காரணமான மன அழுத்தம் என்று எழுதி கொடுத்து விட்டனர்.

கோபம் கொண்ட மாணவர்களும் மாணவிகளும் அன்று மாலை 6 மணி  முதல் கல்லூரி விடுதிக்குள் நுழையாமல் ஸ்ட்ரைக் செய்தனர். 1200 பேருக்கு மேல் கூட்டம் கூடி விட்டது. போலிஸ் வரவழைக்க பட்டனர். பேச்சுவார்த்தையின் போது, யாரோ போலீசாரை தாக்க, எல்லோருக்கும் லத்தி சார்ஜ் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கும் கூட...

மாணவர்கள் 5 கிமீ வரை ஓடி வந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய நிலை. சிக்கியவர்களுக்கும், கெஞ்சியவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத வகையில் கிடைத்த அடிகள், மருத்துவமனையில் படுக்க வைத்தது.

அடுத்த நாள் தான் சுஜாதாவையும், கௌசிகாவையும் போலீஸ் கைது செய்தது.

அதற்கடுத்த நாளில் இருந்து கல்லூரி காலவரையின்றி விடுமுறை அளித்து மூடப்பட்டது. அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கம் போல் சென்றவர்களை அங்கிருந்த பெரும் போலீஸ் கும்பல் விரட்டியடித்தது. ஆவடி முழுதும் போலீஸ் பரபரத்தது. விடுதியில் உள்ள மாணவ மாணவிகளையும் வீட்டிற்கு அனுப்பி விடப்பட்டனர்.

இன்னமும் காலேஜ் பலத்த பாதுகாப்புடன் மூடி தான் கிடக்கிறது.

மீடியாக்கள் வழக்கம்போல கண்மூடி கொண்டது. 30க்கும் மேற்பட்ட மீடியாக்கள் இயங்கும் இந்த பரபரப்பான தமிழகத்தில் வெறும் ஒன்றிரண்டு மீடியாக்கள் மட்டும்தான் இது பற்றி பேசியது. அவர்களும் பூசி மழுப்பி மாணவி தற்கொலை என்று மட்டுமே அறிவித்தார்கள்.

அநேகமாக இன்னும் கொஞ்ச நாட்களில் காலேஜ் திறக்கப்பட்டு எல்லோருக்கும் செமஸ்டர் எக்ஸாம் நடக்கலாம்.

செமஸ்டர் முடிந்து, எந்த பேப்பரை திருப்பினாலும், எல்லா சேனல்களிலும் வேல் டெக் விளம்பரங்கள் ஜொலிக்கலாம்...





Nimirndhu nil

நிமிர்ந்து நில் ஓர் சிறப்பான படமாக வந்திருக்க கூடிய ஒன்று. சிவாஜி படத்திற்கும், நிமிர்ந்து நில்  படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தான் நினைக்கிறேன். சிவாஜி படம் ஏன் மக்களை முகம் சுளிக்க வைத்தது என்று மேலோட்டமாக ஆராய்ந்து இருந்தாலே, நிமிர்ந்து நில் படம் உண்மையாகவே நிமிர்ந்து நின்றிருக்கும்.

இரண்டு படத்திலும் நாயகன் ஆனவன், ஒரு சராசரி குடிமகனை பிரதிபலிப்பவனாக இருக்கிறான். இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு, ஒரு க்ளாஸிக் சினிமாவிற்கான எதிர்பார்ப்பை தன்னிச்சையாகவே வரவழைக்கிறது. மிக முக்கியமாக படம் பார்க்கும் மக்கள், தம்மை மிக எளிதாக நாயகனுடன் பொருத்தி பார்க்கிறார்கள்.

முதல் பாதியின் முடிவில், நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சிறப்பாக தொகுத்து வழங்கி விட்டு, பிற்பாதியில் அத்தனை பிரச்சனைகளையும் நாயகன் ஜஸ்ட் லைக் தட் தனது ஹீரோயிச சாயம் கொண்டு சமாளிப்பது மக்களால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது. அங்கேயே இந்த படம் தனது தனித்துவத்தை இழந்து, இது ஒரு ஃபேக் மூவி என்று மக்களுக்கு புரிந்து விடுகிறது.

அது வரை, தம்மை நாயகனுடன் பொருத்தி பார்த்து, பிரச்ச்னைகளுக்கு என்ன தான் தீர்வு என்று மக்கள் ஆவலுடன் திரையை நோக்குகையில், ஒரு சராசரி மனிதனால் சாத்தியமே இல்லாத ஒன்றை சொல்லி காதில் பூ சுத்துகையில் தான் கடுப்பாகி போகிறார்கள்.  ஒன்னுத்துக்கும் உதவாத கமர்ஷியல் படத்தை ஏதோ புரட்சி படம் போல் பில்ட் அப் கொடுத்தது தான் படத்திற்கு எதிராக வேலை செய்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

ஏதோ சமுதாய விழிப்புணர்விற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட படம் போல் ஆங்காங்கே பாசாங்கு செய்து விட்டு, கடைசியில் எல்லாமே வியாபார யுக்தி என்று தெரிய வரும் போது, நமக்கே நம் மீது கடுப்பாக வந்து தொலைக்கிறது. விஷயம் என்னவென்றால், நம் நிகழ்கால பிரச்சனைகளை நல்லபடியாக பதிவு செய்த இவர்கள், திரைக்கதையை ஓட்ட தெரியாமல் எங்கோ புளிய மரத்தில் விட்டு விட்டார்கள். பதிவு செய்ததோடு நிறுத்தி தொலைத்திருக்கலாம், ஆர்ட் மூவி அந்தஸ்தாவது கிடைத்திருக்கும். ஆனால் சில்லறை புரளாது, அதற்காக டபுள் ரோல், குத்து பாட்டு, ஆக்‌ஷன் சீக்குவன்ஸ், அது இது என்று அலைக்கழித்து விட்டனர்.

எல்லாம் முடித்து, உங்களை நீங்களே செதுக்கி கொள்ள வேண்டும் என்று மெஸேஜ் வேறு... வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று நூறு நூறு ரூபாயை மக்களிடம் வசூலித்து, கடைசியில் எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு மட்டும்தான் கடவுள் தெரியும் என்று சொல்ல, எல்லோரும் இல்லாத கடவுளை தரிசித்து வருவார்கள்.

அதுபோல், இந்த மெஸேஜ் ஒரு சிறப்பான மெஸேஜாக இருந்தாலும், பிரச்சனைக்கான தீர்வை சொல்லவில்லை. இருந்தாலும் மெஸேஜ் சிறப்பாக இருக்கிறதே என்று கேள்வி ஏதும் கேட்காமல் வர வேண்டிய நிலைக்கு ஆளாகின்றோம்.

நான் கேட்கிறேன் , ஜெயம் ரவி இந்த படத்தில் அப்பழுக்கில்லாத, கள்ளம் அறியா புனித ஆத்மா... அவர் ஏன் தன்னை தானே திருத்தி கொள்ள வேண்டி, தன்னை தானே சுத்தியால் அடித்து கொள்கிறார். ஒன்றும் புரியவில்லை.

தற்போது வந்து கொண்டிருக்கும் குப்பை தமிழ் சினிமாக்களில், இது ஓரளவுக்கு தேறுகிறது. அட்லீஸ்ட் எழுந்து ஓடும் அளவிற்காவது இல்லாமல் இருக்கிறது. அதுவரை நிம்மதி.



Accidents



சுத்தி முத்தி கேள்விப்படும் சமாச்சாரங்கள் அனைத்தும் தாறுமாறாக இருக்கின்றன.

1) தெரிந்த பாட்டி ஒருவரும், அவரது மகளும் பாட்டிக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு திரும்ப நடந்து வந்திருக்கிறார்கள். யாரோ ஒரு ஓவர் ஸ்பீடு குடிமகன், வந்த ஸ்பீடில் தனது இடது ஹேண்டில் பாரால் பாட்டியை லைட்டாக தட்டி விட்டு, அவன் பாட்டிற்கு விர்ர்ர்ரென்று பறந்து விட்டான். பாட்டிக்கு கை முறிவு, திரும்ப மருத்துவமனைக்கே நடந்து கையில் கட்டு போட்டு கொண்டு வீடு திரும்பினார்.

2) மாமா ஒருவர் சமீபத்தில் திருப்பதி போய் வந்தார். அவரது வீட்டருகே பட்டறை ஒன்று இருக்கிறது. அந்த பட்டறை ஆட்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு லட்டு கொடுக்க உள்ளே நுழைந்திருக்கிறார், கொடுத்து விட்டு வெளியில் வருகையில் வேட்டி எதிலோ பட்டு இழுக்க, தடுமாறி கீழே விழுந்திருக்கிறார், விழுந்த இடத்தில் ஒரு கம்பி, அது கையில் ஏறி, பலத்த காயம். 9 தையல் போட்டிருக்கிறார்கள்.

3) என்னுடைய பெரியம்மாவுக்கு தெரிந்த ஒருவர் கிருஷ்ணகிரியில் அவரது வீட்டில் க்ரைண்டரில் மாவு ஆட்டி கொண்டிருந்தார். அவரது உறவினர் ஒருவர் பெங்களூர்  நாராயண ஹிருதாலயாவில் என்ன காரணத்திற்காகவோ அட்மிட் ஆகி இருப்பதாக போன் வரவே, போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி இருக்கிறார். மருத்துவமனை போய் பேஷண்ட்டை பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தவரை ஒரு க்ரூப் ஃப்ரீ செக் அப் செஞ்சிக்கோங்க என்று மடக்கி இருக்கிறது. நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு அதெல்லாம் வேணாம் என்று சொல்லியவரை வம்படியாக செக் அப் செய்து விட்டு, ரிசல்ட்டுக்காக ஒரு இடத்தில் வெய்ட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். உட்கார்ந்திருந்தவர் அங்கேயே Low BP வந்து இறந்துவிட்டார். வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருப்பாரா என்பது தெரியவில்லை.





Maan karathey


நான் கவனித்த வரையில் A.R.முருகதாஸ் திரும்ப திரும்ப ஒரே தவறை தான் வம்படியாக செய்கிறார். அப்போதைய ட்ரெண்டில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களை நம்பி படத்தை ஆரம்பிக்கிறாரே தவிர, கதை - திரைக்கதை அம்சங்களை உதாசீனம் செய்கிறார். ஒரே விதிவிலக்கு, எங்கேயும் எப்போதும்... மீதி எல்லாம் வரிசையாக அடி வாங்கி கொண்டிருக்கிறது, படம் ரீலிஸான 2-3 நாட்களுக்கு தியேட்டர்கள் பரபரப்பாக இயங்கும். அதன்பின் படத்தின் லட்சனம் தெரிந்து உஷாராகி கல்தா கொடுத்து விடுவார்கள். சிலரே சிலர் மட்டும் அவரின் தயாரிப்பில் வெளி வந்த படங்களை க்ளாஸிக் என்று சிலாகித்து கொண்டிருப்பர், அதுவும் 10 நாட்களுக்கு மட்டுமே. இது ஆரம்பத்தில் 'பலராக' இருந்தது, இப்போது 'சிலராகி' விட்டது , இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் அருகி டோட்டலாக காலியாகி விடும்.

பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்-லைனகள் கேட்டே ஓகே செய்யப்படுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் "மான் கராத்தே" திரைப்படமும் கூட பிரமாதமான ஒன்-லைனை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு எப்படி திரைக்கதை என்னும் தீனி போடுவது என்று தெரியாமல் தவியாய் தவித்து இருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக கூட இருந்தது.

பொதுவாக ஹீரோயின்களை லூஸு போல் சித்தரிப்பது தான், தமிழ் சினிமாவின் பிரதான வழக்கம். இதில் ஒரு படி மேலே போய் ஹீரோயினின் அப்பாவையே லூஸாக சித்தரித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

+2 டொக்கு அடித்த பெண்ணின் அப்பனே, இப்போதெல்லாம் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள்.  அப்படியே கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள் பொண்ணு பார்க்க வந்தாலும் அவர்களிடமே salary slip, allotment order, bank balance, pass book எல்லாம் காட்ட சொல்லும் இந்த காலக்கட்டத்தில், ஹன்சிகாவின் அப்பாவான சாயாஜி ஷிண்டே, 10 திருக்குறளை சொல்லும் பையனுக்கே தன் பொண்ணை கொடுப்பேன் என்று எண்டர்டெயின்மெண்ட் மூவி டச் கொடுக்கிறார்... கொடுமை.

ஆங்காங்கே அனிருத், முருகதாஸ் மற்றும் சில நடன கலைஞர்கள் எல்லாம் எட்டி பார்க்கிறார்கள். இவர்கள் என்னா பெரிதாக புடுங்கி விட்டார்கள் என்று Guest appearance கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன், ஹன்சிகாவே Guest appearance கொடுத்தது போல் தான் இருந்தது.


Naan Sigappu Manidhan - Movie Review


- விஷாலுக்கு இந்த படத்திலும் கெட் அப் மாற்றப்படவில்லை. மாற்ற முடியவில்லை என்றே அவதானிக்கிறேன்.

- இனியா ஒரு படத்தில் கள்ளகாதல் செய்யும் பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திலும் அவரை கள்ளக்காதல் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
ப்ரியாமணி ஒரு படத்தில் 'ரேப்' சீனில் கமிட் ஆகி நடித்தார். அவருடைய பெர்பார்மன்ஸை அடுத்த படத்திலும் பார்த்து 'ரேப்' சீன் ஒன்றை வைத்தார்கள்.
லக்ஷ்மி மேனன் இந்த படத்தில் ஒரு ரேப் சீனில் நடித்திருக்கிறார்.அவர் மேல் கோலிவுட்டில் இருக்கும்  செண்ட்டிமெண்ட் சாம்பிராணிகளின் கண் படாமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

- ஜீ.வி.பிரகாஷுக்கு எங்கயோ நிச்சயம் எங்கயோ மச்சம் இருக்கிறது. எவ்வளவு மொக்கையாக பாடல்கள் போட்டு கொடுத்தாலும், இயக்குனர்கள் சந்தோஷமாக வாங்கி கொள்கிறார்கள். கருமம், அது ஹிட் ஆகி தொலைக்காமல் மரண பல்பு வாங்கினாலும், வேறு ஆள் கிடைக்காமல் அவரையே ஈ மொய்ப்பது போல் மொய்க்கின்றார்கள்.
பிண்ணனி இசையெல்லாம் கொடூரம். வசனம் பேசி கொண்டிருக்கும் போதெல்லாம் பிண்ணனி இசை வாசிக்கிறார்கள். ஒரு மயிரும் புரிய மாட்டேங்குது.

நீர் நல்லாயிரும் ஐயா...!


வேறு வழியில்லை. இந்த படத்தை கொண்டாடி தான் ஆக வேண்டும். ஆக்‌ஷன் படம் தான். ரிவென்ஜ் ஸ்டோரி தான். ஆனாலும் கொண்டாடி தான் ஆக வேண்டும். நீண்ட நெடிய திரை பயணத்தில், நம் தமிழ் திரையுலகம் 'ஆக்‌ஷன் ரிவென்ஜ்' என்ற இடத்தில் தான் டெண்ட் அடித்து அமர்ந்து விட்டது. அதை இந்த விமர்சகர்கள் எல்லாம் அடித்து கிளப்பியதில், ராங் ரூட் எடுத்து ஃபேண்டஸி, காமெடி, எண்டர்டெயின்மெண்ட் மூவி என திசை திரும்பி விட்டார்கள்.

திரும்பின இடமெல்லாம் பலத்த அடி, கலெக்‌ஷனும் செம்ம டல். என்ன செய்வதென்று தெரியாமல் சில ஸ்டெப்கள் பின்னால் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

மறுபடியும் கோலிவுட் முன்னால் அடி எடுத்து வைக்க வேண்டும் தான் என்றாலும், கிளம்பிய இடத்தை சரியாக கண்டுபிடித்து பின் வந்ததற்காக ஒரு Congrats  சொல்லலாம்.

Kottai Kovil

பெரும்பாலும் என்னுடைய பாட்டி எங்கேயாவது போக வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்கவே மாட்டார். போக வேண்டிய இடத்தை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக பேசுவார். அதை வைத்து நாமே புரிந்து கொண்டு கூட்டி சென்றால் சந்தோஷமாக வருவார். நேற்றைய தினம் கோட்டை கோவில் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழுந்ததால், இன்று பாட்டியை கோட்டை கோவில் கூட்டி சென்றேன்.

மூன்று விஷயங்களை கவனித்தேன்...

1) கோவில் ஐயரின் தீபாராதனை தட்டில் சில்லறைகளே அதிகம் விழுகின்றன. அடக்கத்துடன் ஏற்று கொள்கிறார். அவரிடம் suv xylo car இருக்கிறது.

2) பா.மா.க இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. கோவிலுக்குள் நுழைந்த பிரசார கும்பல், வரிசையில் நின்றிருந்த பக்தர்களை ஒதுங்கச் சொல்லி சாமி தரிசனம் பார்த்தனர். தரிசனம் பார்த்த கையோடு, கோவிலில் இருந்த எல்லோருக்கும் பிரசார நோட்டீஸ் கொடுத்து மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி கேட்டுக்கொண்டனர்.

3) ஆட்டோ ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தியிருந்த ஆட்டோக்காரர்கள், பேப்பர் படித்து கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் தான் இருந்தார்கள். முக்கால் கிலோமீட்டரில் இருக்கும் கோவிலுக்கு கூப்பிட்டால் 50 ரூபாய் கேட்டார்கள். போங்க டா கேனை கபோங்களா என்று டவுன் பஸ்ஸில் போய் வந்தோம். திரும்ப ஊருக்கு பஸ் ஏறும் போது, ஆட்டோ ஸ்டேண்டை எட்டிப் பார்த்தேன். எல்லாரும் எதற்கோ  சத்தமாக சிரித்து பேசி கொண்டிருந்தார்கள். ஒன்றரை மணி நேரமும் ஆட்டோக்கள் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தன.

Tenaliraman Movie review


படம் சூப்பர்.

விவாதிக்கவோ, விமர்சிக்கவோ பெரிதாக ஒன்றும் இல்லை. படத்தில் புரட்சி எல்லாம் வருகிறது. அது மட்டுமில்லாமல் எந்தெந்த மினிஸ்ட்ரி எப்படி செயல்பட வேண்டும் என்று சீரியஸாக அட்வைஸ்கள் எல்லாம் தூள் பறக்கிறது. எல்லாமே மேலோட்டமாக அள்ளி தெளித்து அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கான படம் என்பதால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி, யாரும் எதையும் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை.

படத்தில் வரும் தெனாலிராமன் கேரக்டரை விட, மன்னன் கதாபாத்திரம் தான் எதார்த்தமாகவும், போலித்தன்மை இல்லாமலும் இருக்கிறது. அதனாலேயே அந்த கதாபாத்திரம் மனதில் நிற்கும் அளவிற்கு வெகுவாக கவர்கிறது. இத்தனைக்கும் மன்னன் பேர் கூட கடைசி வரையில் சொல்லப்படவில்லை, அதை பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

நீதிக்கதைகள், திருக்குறள் கதைகள் எல்லாம் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கின்றன. அதன் வர்த்தக பாணியை அழகாக பின்பற்றி இதிலும் கூட, சில தெனாலிராமன் கதைகளை காட்சி படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் பாராட்டுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமா நாயகிகளை தான் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. வடிவேலு, விஜயகாந்த், டி.ராஜேந்திரன் போன்ற ஹீரோக்களை துரத்தி துரத்தி காதல் கொள்கிறார்கள். விட்டால் கற்பழித்தே விடும் அளவிற்கு ஓவர் ரொமான்ஸ் செய்து ஹீரோக்களை மகிழ்விக்கிறார்கள். ஆனால் ஆர்யா, சித்தார்த், ஜீவா போன்ற அழகு ஹீரோக்களை மட்டும் அலையோ அலை என்று அலைய வைக்கின்றனர். நாட்டில் அழகாக பிறப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா?

படத்தின் செட், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு என்று அனைத்து தரப்பினரும் பழங்காலத்து மன்னர் வாழ்க்கையை காட்சிப்படுத்த இயன்ற வரை முயன்று இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக இது போதாது. இவ்வளவு டெக்னாலஜிகளையும், டெக்னீஷன்களையும் வைத்திருக்கும் கோலிவுட், இன்னமும் நம்பும் படியான மன்னர் காலத்து வாழ்க்கையை காட்சிப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. செலவு அதிகம் பிடிக்கிறது. அதை நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் வேண்டும் என்பதே என் கருத்து. ஒருவர் விடாமல் எல்லோரும் புத்தம் புது ஆடைகளை அணிந்து வலம் வருவதும், அரண்மனை முழுதும் டெம்ப்ளேட்டாக சுத்தமாக இருப்பதும் ரொம்பவே உறுத்துகிறது.

D.இமான் என் ஹீரோ, இப்போதைய ட்ரெண்டில் இமான் தான் டாப் என்பது என் கருத்து. 'ஏலே ஏலே மருது' பாட்டெல்லாம் என் மனதிற்கு அத்தனை நெருக்கமானவை. இந்த படத்தின் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றி விட்டது தான் என்றாலும், பழங்காலத்து கதை என்பதால் நிறைய கட்டுப்பாடுகள் கழுத்தை நெரித்திருக்கும் என அவதானிக்கிலாம். ஒவ்வொரு முறை சரணம் repeat ஆகும் போதும், தபேலாவின் தாளத்தில் ஏதேனும் வித்தியாசம் காட்டும் பழங்கால டெக்னிக்கை இதில் பயன்படுத்தி இருப்பதை ரசிக்க முடிகிறது. அது மட்டுமே ரசிக்கும் வகையில் இருப்பது தான் சோகம்.

கல்லா கட்டுமா கட்டாதா என்ற பீதியிலே ஸ்க்ரிப்ட் அமைத்திருப்பது நன்கு புரிகிறது. இத்தனைக்கும் இம்சை அரசன் படத்தை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் ஏன் ஸ்க்ரிப்டில் இத்தனை ஓட்டைகள் என புரியவில்லை. மன்னர் 10 நாட்கள் மக்களோடு மக்களாக வாழ்வதை காட்டுகிறார்கள். நாள் 1 என சொல்லி சில காட்சிகளை காட்டுகிறார்கள். அதன் பின் அந்த கண்ட்டினுயேஷனையே காணோம். நாள் 5 க்கு தாவி விடுகிறார்கள். இதற்கு எதற்கு கஷ்டப்பட்டு எத்தனையாவது நாள் என்று காட்டவேண்டும். யார் கேட்டார்கள் ?

மன்னருக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய அரசவையிலும், நாட்டிலும் என்ன பிரச்சினை என்று தெரிந்த பின்னரும், ஏன் மன்னர் பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்? 10 நாள் கணக்கு முடிய வேண்டும் என்றா? உண்ணாவிரதத்தில் ஒருவரது உயிர் போகும் நிலையிலும் கூட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் ரகசியம் புரியவில்லை.
இந்த அளவு ஓட்டை ஒடசலான ஸ்க்ரிப்ட்டையும் தாங்கி பிடிப்பதும், ரசிக்க வைப்பதும் One & only வடிவேலு மட்டுமே.

கோலிவுட்டின் பல பிரதான character artistகளை சின்னதும் பெரிதுமாக ஒரு ரவுண்டு வர வைத்திருக்கிறார்கள். இது நிச்சயம், வடிவேலுவின் அக்கறையாக தான் இருக்கும்.

ஆரூர்தாஸ் வசங்களில் வடிவேலு ஆதிக்கம் செய்யும் இடங்கள் உண்மையிலே வெறி கொண்டு சிரிப்பை வரவைப்பவை. "உன் அம்மாக்களில் 3 பேருக்கு இடுப்பு வலியாம், போய் பார்த்து விட்டு வருகிறேன்" என்று அந்தபுரத்திற்கு கிளம்பும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

தெனாலிராமன் போன்ற படங்களை நிச்சயம் வரவேற்கலாம் என்று தான் நினைக்கிறேன். பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றிய படமெடுத்தால் பார்க்க ஜாலியாக தான் இருக்கிறது. வெவ்வேறு பரிணாமங்களை பார்க்க சுவாரஸ்யமாகவும் இருக்கும். சமகால அரசியலை மறைமுகமாக தாக்கி டார்ச்சர் செய்யாமல் இருந்தால் சரி.

ஆன்னா ஊன்னா புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்றால் கேட்பதற்கே போரடிக்கிறது.


Sunday, 12 January 2014

Veeram - Movie Review



முன்குறிப்பு – இது ஒரு நடுநிலையான க்ளாஸிக் விமர்சனம்


இந்த படத்திலும் டைட்டில் கார்டு போடுவதில், ஓர் கற்பனை வறட்சி. பொதுவாக, இது போன்ற கமர்ஷியல் படங்கள் எல்லாம், டைட்டில் கார்டு போடுவதில் குறிப்பிட்ட ரெண்டு மூன்று ஃபார்மட்டுகளையே, பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
·         அருவா, கத்தி, கம்பு இவற்றில் ஏதாவது ஒன்று, எதாவது ஒரு மலையை போட்டு பொளந்து, படத்தின் தலைப்பை செதுக்கும்.  
·         இடி இடிக்கும், மழை பெய்யும். படத்தின் தலைப்பு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும்.
·         படத்தின் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட், ஒன்று கூடி படத்தின் தலைப்பை உருவாக்கும். உதாரணமாக, விதவிதமான பட்டாசு சேர்ந்து சிவகாசி என உருவாகுவதை போல
சென்ட்டிமென்ட்டோ என்ன எழவோ, இப்பொதெல்லாம் இடி இடிக்கும் டைட்டில் கார்டுகளே, இயக்குனர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, டைட்டில் எழுத்துக்களுக்கு சிகப்பு கலர் ஃபாண்ட் கொடுக்கவில்லையென்றால், இயக்குனர்களுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்த திருப்தியே வராது என நினைக்கிறேன். வீரம் படத்திற்கும் அப்படி ஒரு கற்பனை வறட்சியான டைட்டில் கார்டே நம்மை அன்புடன் வரவேற்கிறது.

படம் ஆரம்பத்தில் நன்றி சொல்லி ஓடும் ஸ்லைடில், ஜெ.மோ பெயரும் வரவே, அநிச்சையாக எதற்கும் வெளியே போகும் வழி எது என்று ஒரு முறை பார்த்து வைத்து கொண்டேன்.

ஹீரோ என்ட்ரி எல்லாம் முடிந்து கொஞ்ச நேரத்திலே, படம் கொஞ்சம் நம்மை மெல்ல வெலவெலக்க செய்கிறது. ஏனென்றால், அஜீத்திற்கு 4 தம்பிகள். ஹீரோவிற்கு ஒரு தம்பி இருந்தாலே, ஒண்ணுக்கு போகும் வரை அடிப்பார்களே என்ற பயம், நம்மை நைஸாக டாய்லட்டிற்கு போகும் கதவையும் அநிச்சையாக பார்க்க வைக்கிறது.

அதாகப்பட்டது, அஜீத்திற்கு இருக்கும் 20136 நல்ல பழக்கங்களில், ஒருவரை அடிப்பதற்கு முன்பு, அவருக்கு கறியும் சோறும் பரிமாறி, தெம்பேற்றி, அதன் பிறகு சம்பந்தப்பட்டவரை அடிப்பதும் ஒன்று. இந்த சமயத்தில், படம் பார்க்கும் ஆர்வத்தில் நாம் சாப்பிடாமல் வந்து விட்டது, அநிச்சையாக ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. (இன்னும் எத்தனை அநிச்சை, அநிச்சையாக நுழைய இருக்கிறதோ என நீங்கள் அநிச்சையாக பதைபதைக்கிறீர்கள் என்பது புரிகிறது. என்ன செய்வதுஇது ஒரு க்ளாஸிக் விமர்சனம் என்பதால் இதையெல்லாம் பொறுத்து தான் ஆக வேண்டும்).

அஜித் முரட்டுக்காளை படத்தை முரட்டுத்தனமாய் ஏழெட்டு முறை பார்த்து, தீர்க்கமாக ஒரு முடிவிற்கு வருகிறார். கல்யாணம் செய்துகொண்டால், வீட்டிற்கு வரும் மணப்பெண், அண்ணன் தம்பிகளை பிரித்து விடுக்கூடும் என்பதால், கல்யாணம் என்றாலே காத தூரம் ஓடுகிறார். தம்பிகள் கல்யாணம் செய்வதையும், இலக்கியவாதி கணக்காக பொங்கியெழுந்து வன்மையாக கண்டிக்கிறார்.

ஆனால், அஜித்தின் தம்பிகள் தமிழர்களாக பிறந்து தொலைத்து விட்ட காரணத்தால், இங்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களாலும், பாடல்களாலும் உந்தப்பட்டு, தேவையோ இல்லையோ ஒரு ஃபிகரை உஷார் செய்கின்றனர். அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தமக்கு திருமணம் ஆகும் என்பதை ஆகும் என்பதை ஏதோ ஒரு ஆயா சொல்ல கேட்டு, அதன் படியே சந்தானத்தின் உதவியுடன் அஜித்திற்கு வரன் தேடுகின்றனர். அங்கு தான் தமன்னா அறிமுகம் ஆகிறார். அவனவன் 6 வருடங்கள் ஆகியும் வரன் செட்டாகாத காரணத்தால், அங்கிள் என கூப்பிடும் வயசு பெண்களை ஏற இறங்க பார்க்கும் காலக்கட்டத்தில், அஜித்திற்கு மட்டும் 2 ரீல் முடிவதற்குள் வரன் கிடைத்து, 2 பாட்டு ஓடி, அஜித் ஒரு சூப்பர் ஹீரோவாக கன்னி கழியாத தமிழர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இத்தனைக்கும் அஜித் பார்க்க தமன்னாவின் மாமானார் போல் தோற்றமளிக்கிறார். மற்றப்படி அஜித்தின் சண்டைக்காட்சிகளுக்கெல்லாம் யாரும் அசந்த மாதிரி தெரியவில்லை.

அடசொல்ல மறந்து விட்டேனே, எல்லா கமர்ஷியல் படங்களை போலவும், இந்த படத்திலும் அஜித் ஒரு அடிதடி ஆள். எல்லா கமர்ஷியல் பட நாயகிகள் போலவும் இதிலும் தமன்னாவிற்கு அடிதடி என்றாலே பிடிக்காதுஉவ்வே

படத்திற்கு இசை தேவிஶ்ரீபிரசாத். இவரின் முந்தைய பாடல்களையே, திரும்ப திரும்பபீட்மாற்றி போட்டு, நான்கைந்து பேரை லபோ லபோ என கத்தவைக்கும் பழக்கத்தை இவர் விட்டால் தான், நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறையும். இவரை பற்றி போதுமானளவு, முந்தைய விமர்சங்களிலே துவைத்து தொங்க போட்டும் திருந்தாத காரணத்தால், அடுத்த்தாக சில நடன இயக்குநர்களை பார்க்கலாம்.

அஜித்திற்கு நடனம் வராது தான், ஒத்து கொள்கிறோம். கிழக்கிந்திய கம்பெனிகள் இந்திய திருநாட்டில் அடியெடுத்த வைத்த நாளன்று, அஜித்திற்கு ஆன ஒரு ஆக்ஸிடன்ட்டை காரணமாக வைத்து இன்று வரை அவர் டான்ஸ் மாஸ்டர்களை டபாய்க்கிறார் என்பதையும் ஒத்து கொள்கிறோம். அதற்காக மெக்கானிக் ஸ்பேனர் திருகவது, பிசியோதிரபி எக்சர்சைஸ்கள் போன்று  எல்லாம் ஸ்டெப் வைத்தால் என்னாகும் என்று யோசிக்க வேண்டாமா? பாடல் காட்சிக்கு தம்மடிக்க வெளியே போனவர்கள் எல்லாம் தியேட்டரினுள் எழும் சிரிப்பு சத்தத்தை கேட்டு, சிகரெட்டும் கையுமாக திரையரங்கினுள் நுழைந்து விட்டனர். அரங்கு முழுவதும் சிகரெட் நாற்றம். அவர்களிடம் போய்இது மிகவும் கொடிய நோய்என்றா சொல்லி கொண்டிருக்க முடியும். காது மேலயே போட மாட்டார்களா?

வில்லன் வசம் இருக்கும் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு நல்லது செய்வதற்காகவே, அஜித் காய்கறி மார்க்கெட்டை குத்தகைக்கு எடுக்கிறார், ரேஸ் கார் ஓட்டி திரிந்து கொண்டிருந்தவர் தமன்னாவிற்காக மாடு ஓட்டுகிறார், தனக்கு கீழ் வேலை செய்த வேலைக்காரனுக்கு கல்யாண பரிசாக அவனுக்கு காய்கறி மார்க்கெட்டில் ஒரு போர்ஷனை ஒதுக்கி கொடுத்து அவனை முதலாளி ஆக்குகிறார்இப்படியே அவர் நல்லவர் என நிரூபிப்பதற்காக அதையும், இதையும் செய்து கொண்டே இருக்கிறார். நமக்கோ இன்டர்வெல் எப்ப டா விடுவீங்க என தவியாய் தவிக்கிறது. எவ்வளவு நேரம் தான் சாப்பிடாமல் அடி தாங்குவது

பொண்ணுக்கு அப்பாவாகவே நடித்து நடித்து அலுத்து போய், கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கி சென்று, சமீபகால படங்களில் வெரைட்டி வெரைட்டியாக வலம் வந்த நாசரை, மயக்க மருந்து போட்டு கடத்தி வந்து தமன்னாவிற்கு அப்பாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அஜித்தை பற்றி தமன்னா, தன் அப்பாவிடம் தொலைபேசியில் எடுத்து சொல்லி, அஜித்தை காதலிச்சிக்கிட்டுமா என பெர்மிஷன் கேட்க, ஆளு எப்படிம்மா என நாசர் கேட்க, செம்ம வொய்ட் ப்பா என தமன்னா சொல்ல, அஜித்தின் தலை முதற்கொண்டு வொய்ட்டாக தான் இருக்கும் என்ற விஷயம் தெரியாமல், நாசர் செம்ம குஷியாகி அவரை ஊருக்கு கூட்டிட்டு வாம்மா என சந்தோஷமாக அழைப்பு விடுக்கிறார்.

ஊருக்கு வரும் வழியில், ரயிலில் வைத்து ஒரு சண்டை காட்சி வருகிறது. கிட்டத்தட்ட சண்டை முடிந்து விட்டது என்ற நினைப்பில், அஜித் ஹீரோயிட்டிக்காக தமன்னாவை பார்த்து, மாமாவை என்னான்னு நினைச்ச, உன்மேல ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன் டா செல்லம் என சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த வழியாக பறந்து வந்த ஒரு கோடாரி லைட்டாக தமன்னாவை ஸ்க்ராட்ச் செய்து விட்டு, மலேசியா நோக்கி போகிறது. அஜித் தமன்னாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடுகிறார்.

வந்தது இன்டர்வெல்கோட்டான கோட்டி நன்றிகள் யேசப்பா…. கோட்டான கோட்டி நன்றிகள்

முக்கால்வாசிக்கும் மேலான தமிழ் திரைக்காவியங்களின் இடைவேளைகள் சண்டை காட்சிகளோடு முடிவதால், இடைவேளை முடிந்து வரும் சீன் ஹாஸ்பிட்டல் சீனாக தான் இருக்கும் என்ற அளவிற்கு தமிழன் லாஜிக்கில் கில்லியாக இருப்பதால், கேண்டீன் போன மொத்த ஜனமும், 5 நிமிஷம் தாமதமாகவே வந்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் சிரிப்புமிக்க சில வடிவேல் காமெடிகளை மிஸ் செய்த துரதிர்ஷ்டசாலி ஆகிவிட்டார்கள் என்று நினைக்கையில், கொஞ்சம் ஜாலியாக இருந்தது. “இருப்பா ஒரு பொசிஷனுக்கு வந்துக்குறேன்என்ற மருதமலை காமெடியை, அஜித்தே நம்மை மகிழ்விக்க நமக்கு பெர்ஃபார்ம் பண்ணுகிறார். அநேகமாக அது அஜித் வடிவேலுவிற்கு கொடுக்கும் ட்ரிபூட்டாக தான் இருக்கக்கூடும். அது போக மற்றுமொரு க்ளாஸான வடிவேல் காமெடியையும், அஜித் நமக்காக ட்ரிபூட் செய்கிறார்மனுஷன்னா, நீ தான் யா மனுஷன்

என்னா டா இவன், கதையையே சரிவர சொல்ல மாட்டேங்கிறானே என நீங்கள் அலுத்து கொள்வது புரிகிறது. முன்பே சொல்லியிருக்கேன் அல்லவாக்ளாஸிக்க்ளாஸிக்விமர்சனம்விமர்சனம்….

ஆர்ட டைரக்ஷன் நேர்த்தியாக இருந்தது. சினிமெட்டோகிராபி ஃப்ரெஷாக இருந்தது. படத்தொகுப்பு பக்காவாக இருந்தது. (என்னதுஅப்படின்னா என்னாவா….? எல்லாரும் சொல்றதை தானே நானும் சொல்றேன், இவங்களோட மல்லுக்கட்டாத டா சூனாபானா, அடுத்த பத்திக்கு ஓடிடு…)

தமன்னாவிற்கும், நாசருக்கும் அடிதடி என்றாலே ஆகாது. ஆனாலும் தமன்னாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அஜித், தமன்னாவிற்காக அடிதடிகளை கைவிடுகிறார். ஆனாலும், நாசர் மீது இருக்கும் பகையால், வில்லன் கும்பல் நாசரை அழிக்க நினைக்கிறது. அவர்கள் அத்தனை பேரையும் அஜித் சமயோகிதமாக (சமயோஜிதமாசமயோகிதமாஐயையோ தெர்லயே…) சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில், அஜித் ஒரு ஃபைட்டு பார்ட்டி என நாசரின் குடும்பத்திற்கு தெரிய வரவே, எல்லோரும் ஒட்டு மொத்தமாக அஜித்தை அன்ஃப்ரெண்டு செய்து விடுகிறார்கள். அதன்பின், படத்தின் பிரதான வில்லனே அஜித்தை பற்றி நல்லவிதமாக நாசரிடம் எடுத்து சொல்லவே, நாசர் அஜித்தை ஃப்ரெண்டு லிஸ்ட்டில் இணைத்து கொள்கிறார். இதான் யா படம், கதையை சொல்லிட்டேன் போதுமா

இப்ப புடி டா இலக்கிய தரத்தைஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியையும், பெருவாரியான மக்களுக்குள் ஆழமாக வேரூன்றி படர்ந்திருக்கும் வன்முறையையும், வீரம் படம் கேள்விக்குள்ளாக்கி, அதன் வீரியத்தை ஆழ பதிவு செய்தாலும், இதன் தீர்வாக எந்த ஒரு கருத்தையும் முன்வைத்து சொல்லப்படாதது படத்தின் பலவீனம்சாவு டா
    
அஜித் அழகாக ஜொலிக்கிறார், சண்டைக்காட்சிகளில் தெறிக்க விடுகிறார் ஆனாலும் படம் முழுக்க நரைத்த முடியோடு தோன்றுவது, அஜித்தும் நாசரும் க்ளாஸ்மேட் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. (இதாமுல்ல நடுநிலை, இரண்டு குட்டி ப்ளஸ், ஒரே ஒரு பெரிய நெகட்டிவ்முடிஞ்சது மேட்டர்நடுநிலை ரெடி)

இப்போதெல்லாம் 10வது படிக்கும் இளசுகளே, வீணா காதல் வசனங்களை பேசி, ஒருவருக்கு ஒருவர் டார்ச்சர் கொடுத்து கொள்ளாமல், ECR பக்கம் ஒதுங்கும் இந்த காலக்கட்டத்தில், அஜித்தும், தமன்னாவும் பேசும் காதல் கத்திரிக்கா வசன்ங்கள் எல்லாம் இடைவேளையின் போது சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தி வர வைக்கிறது.

தமன்னா அஜித்தை காதலோடு திரும்பி பார்த்தாலே, “பாட்டை கீட்டை போட்ராதீங்கஎன்று மனம் அடித்து கொள்கிறது. இறைவன் எப்போது நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்திருக்கிறான்…! படம் போகப்போக, தமன்னா அஜித்தை சும்மா பார்த்தாலே, பாட்டு தானேபாடிக்கோ போ மா, என்று அனுமதி கொடுக்கும் ஜென் நிலைக்கு வந்து விடுகிறோம்.

படம் பொங்கலுக்கு வெளிவருவதாலோ என்ன எழவோ, ஒரு பாடலுக்கு அஜித், கோட்டுக்கு வேஷ்டி கட்டி வருகிறார்…. கருமம் டா…

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த்து நாசர் தான். மாறி மாறி அடிவாங்கி, படாத அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும் நம்மிடையே, ஆறுதலாக பேசுவது அவர் ஒருவர் தான்

படம் சூரமொக்கையாக போய்கொண்டிருக்கும் ஒரு காட்சியில், “போய்டுங்கய்யா…. தயவு செய்து இங்கிருந்து போய்டுங்கய்யாஎன நம்மை கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறார்.

இன்னொரு சீனில்சக்தி இல்லைப்பாஎனக்கு இன்னொரு சாவை தாங்கற சக்தி இல்லைப்பா, தயவு செய்து இங்கிருந்து போய்டுஎன்கிறார்.

வேறு ஒரு சீனில்என் குடும்பத்துக்காக தனியா நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கியே…” என நம்மை பார்த்து நெகிழ்ந்து, “நீ நல்லாயிருக்கனும் பாநல்லாயிருப்பீங்க” என வாழ்க வளமுடன் மகரிஷியின் உள் அன்போடு நம்மை வாழ்த்துகிறார்.

இதை விட, ஒரு சிறப்பான நன்றியுரையை எந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள்…! அப்போது, அதுவரை வலி தாங்காமல் கலங்கிய நமது கண்கள், நெகிழ்ச்சியால் கலங்க ஆரம்பிக்கிறது

மொத்தத்தில் வீரம்கர்ச்சீப் ஆச்சு ஈரம்