பெரும்பாலும் என்னுடைய பாட்டி எங்கேயாவது போக வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்கவே மாட்டார். போக வேண்டிய இடத்தை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக பேசுவார். அதை வைத்து நாமே புரிந்து கொண்டு கூட்டி சென்றால் சந்தோஷமாக வருவார். நேற்றைய தினம் கோட்டை கோவில் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழுந்ததால், இன்று பாட்டியை கோட்டை கோவில் கூட்டி சென்றேன்.
மூன்று விஷயங்களை கவனித்தேன்...
1) கோவில் ஐயரின் தீபாராதனை தட்டில் சில்லறைகளே அதிகம் விழுகின்றன. அடக்கத்துடன் ஏற்று கொள்கிறார். அவரிடம் suv xylo car இருக்கிறது.
2) பா.மா.க இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. கோவிலுக்குள் நுழைந்த பிரசார கும்பல், வரிசையில் நின்றிருந்த பக்தர்களை ஒதுங்கச் சொல்லி சாமி தரிசனம் பார்த்தனர். தரிசனம் பார்த்த கையோடு, கோவிலில் இருந்த எல்லோருக்கும் பிரசார நோட்டீஸ் கொடுத்து மாம்பழ சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி கேட்டுக்கொண்டனர்.
3) ஆட்டோ ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தியிருந்த ஆட்டோக்காரர்கள், பேப்பர் படித்து கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் தான் இருந்தார்கள். முக்கால் கிலோமீட்டரில் இருக்கும் கோவிலுக்கு கூப்பிட்டால் 50 ரூபாய் கேட்டார்கள். போங்க டா கேனை கபோங்களா என்று டவுன் பஸ்ஸில் போய் வந்தோம். திரும்ப ஊருக்கு பஸ் ஏறும் போது, ஆட்டோ ஸ்டேண்டை எட்டிப் பார்த்தேன். எல்லாரும் எதற்கோ சத்தமாக சிரித்து பேசி கொண்டிருந்தார்கள். ஒன்றரை மணி நேரமும் ஆட்டோக்கள் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தன.

No comments:
Post a Comment