சுத்தி முத்தி கேள்விப்படும் சமாச்சாரங்கள் அனைத்தும் தாறுமாறாக இருக்கின்றன.
1) தெரிந்த பாட்டி ஒருவரும், அவரது மகளும் பாட்டிக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு திரும்ப நடந்து வந்திருக்கிறார்கள். யாரோ ஒரு ஓவர் ஸ்பீடு குடிமகன், வந்த ஸ்பீடில் தனது இடது ஹேண்டில் பாரால் பாட்டியை லைட்டாக தட்டி விட்டு, அவன் பாட்டிற்கு விர்ர்ர்ரென்று பறந்து விட்டான். பாட்டிக்கு கை முறிவு, திரும்ப மருத்துவமனைக்கே நடந்து கையில் கட்டு போட்டு கொண்டு வீடு திரும்பினார்.
2) மாமா ஒருவர் சமீபத்தில் திருப்பதி போய் வந்தார். அவரது வீட்டருகே பட்டறை ஒன்று இருக்கிறது. அந்த பட்டறை ஆட்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு லட்டு கொடுக்க உள்ளே நுழைந்திருக்கிறார், கொடுத்து விட்டு வெளியில் வருகையில் வேட்டி எதிலோ பட்டு இழுக்க, தடுமாறி கீழே விழுந்திருக்கிறார், விழுந்த இடத்தில் ஒரு கம்பி, அது கையில் ஏறி, பலத்த காயம். 9 தையல் போட்டிருக்கிறார்கள்.
3) என்னுடைய பெரியம்மாவுக்கு தெரிந்த ஒருவர் கிருஷ்ணகிரியில் அவரது வீட்டில் க்ரைண்டரில் மாவு ஆட்டி கொண்டிருந்தார். அவரது உறவினர் ஒருவர் பெங்களூர் நாராயண ஹிருதாலயாவில் என்ன காரணத்திற்காகவோ அட்மிட் ஆகி இருப்பதாக போன் வரவே, போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி இருக்கிறார். மருத்துவமனை போய் பேஷண்ட்டை பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தவரை ஒரு க்ரூப் ஃப்ரீ செக் அப் செஞ்சிக்கோங்க என்று மடக்கி இருக்கிறது. நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு அதெல்லாம் வேணாம் என்று சொல்லியவரை வம்படியாக செக் அப் செய்து விட்டு, ரிசல்ட்டுக்காக ஒரு இடத்தில் வெய்ட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். உட்கார்ந்திருந்தவர் அங்கேயே Low BP வந்து இறந்துவிட்டார். வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருப்பாரா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment