இந்த படத்திலும்
டைட்டில் கார்டு போடுவதில்,
ஓர் கற்பனை வறட்சி. பொதுவாக, இது போன்ற கமர்ஷியல் படங்கள் எல்லாம், டைட்டில் கார்டு
போடுவதில் குறிப்பிட்ட ரெண்டு மூன்று ஃபார்மட்டுகளையே, பாரம்பரியமாக
பின்பற்றி வருகிறார்கள்.
·
அருவா, கத்தி, கம்பு இவற்றில் ஏதாவது ஒன்று, எதாவது ஒரு மலையை போட்டு
பொளந்து, படத்தின் தலைப்பை செதுக்கும்.
·
இடி
இடிக்கும், மழை
பெய்யும். படத்தின் தலைப்பு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் அந்தரத்தில்
தொங்கும்.
·
படத்தின்
சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட், ஒன்று கூடி படத்தின் தலைப்பை உருவாக்கும். உதாரணமாக,
விதவிதமான பட்டாசு சேர்ந்து சிவகாசி என உருவாகுவதை போல…
சென்ட்டிமென்ட்டோ
என்ன எழவோ, இப்பொதெல்லாம்
இடி இடிக்கும் டைட்டில் கார்டுகளே, இயக்குனர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, டைட்டில் எழுத்துக்களுக்கு
சிகப்பு கலர் ஃபாண்ட் கொடுக்கவில்லையென்றால், இயக்குனர்களுக்கு
ஃபினிஷிங் டச் கொடுத்த திருப்தியே வராது என நினைக்கிறேன். வீரம்
படத்திற்கும் அப்படி ஒரு கற்பனை வறட்சியான டைட்டில் கார்டே நம்மை அன்புடன் வரவேற்கிறது.
படம் ஆரம்பத்தில்
நன்றி சொல்லி ஓடும் ஸ்லைடில்,
ஜெ.மோ பெயரும் வரவே, அநிச்சையாக
எதற்கும் வெளியே போகும் வழி எது என்று ஒரு முறை பார்த்து வைத்து கொண்டேன்.
ஹீரோ என்ட்ரி
எல்லாம் முடிந்து கொஞ்ச நேரத்திலே,
படம் கொஞ்சம் நம்மை மெல்ல வெலவெலக்க செய்கிறது. ஏனென்றால், அஜீத்திற்கு 4 தம்பிகள்.
ஹீரோவிற்கு ஒரு தம்பி இருந்தாலே, ஒண்ணுக்கு போகும்
வரை அடிப்பார்களே என்ற பயம், நம்மை நைஸாக டாய்லட்டிற்கு போகும்
கதவையும் அநிச்சையாக பார்க்க வைக்கிறது.
அதாகப்பட்டது, அஜீத்திற்கு இருக்கும்
20136 நல்ல பழக்கங்களில், ஒருவரை அடிப்பதற்கு முன்பு,
அவருக்கு கறியும் சோறும் பரிமாறி, தெம்பேற்றி,
அதன் பிறகு சம்பந்தப்பட்டவரை அடிப்பதும் ஒன்று.
இந்த சமயத்தில், படம் பார்க்கும் ஆர்வத்தில் நாம்
சாப்பிடாமல் வந்து விட்டது, அநிச்சையாக ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
(இன்னும் எத்தனை அநிச்சை, அநிச்சையாக நுழைய இருக்கிறதோ
என நீங்கள் அநிச்சையாக பதைபதைக்கிறீர்கள் என்பது புரிகிறது. என்ன
செய்வது… இது ஒரு க்ளாஸிக் விமர்சனம் என்பதால் இதையெல்லாம் பொறுத்து
தான் ஆக வேண்டும்).
அஜித்
முரட்டுக்காளை படத்தை முரட்டுத்தனமாய் ஏழெட்டு முறை பார்த்து, தீர்க்கமாக ஒரு முடிவிற்கு
வருகிறார். கல்யாணம் செய்துகொண்டால், வீட்டிற்கு
வரும் மணப்பெண், அண்ணன் தம்பிகளை பிரித்து விடுக்கூடும் என்பதால்,
கல்யாணம் என்றாலே காத தூரம் ஓடுகிறார். தம்பிகள்
கல்யாணம் செய்வதையும், இலக்கியவாதி கணக்காக பொங்கியெழுந்து வன்மையாக
கண்டிக்கிறார்.
ஆனால், அஜித்தின் தம்பிகள் தமிழர்களாக
பிறந்து தொலைத்து விட்ட காரணத்தால், இங்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களாலும்,
பாடல்களாலும் உந்தப்பட்டு, தேவையோ இல்லையோ ஒரு
ஃபிகரை உஷார் செய்கின்றனர். அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தமக்கு
திருமணம் ஆகும் என்பதை ஆகும் என்பதை ஏதோ ஒரு ஆயா சொல்ல கேட்டு, அதன் படியே சந்தானத்தின் உதவியுடன் அஜித்திற்கு வரன் தேடுகின்றனர்.
அங்கு தான் தமன்னா அறிமுகம் ஆகிறார். அவனவன்
6 வருடங்கள் ஆகியும் வரன் செட்டாகாத காரணத்தால், அங்கிள் என கூப்பிடும் வயசு பெண்களை ஏற இறங்க பார்க்கும் காலக்கட்டத்தில்,
அஜித்திற்கு மட்டும் 2 ரீல் முடிவதற்குள் வரன்
கிடைத்து, 2 பாட்டு ஓடி, அஜித் ஒரு சூப்பர்
ஹீரோவாக கன்னி கழியாத தமிழர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இத்தனைக்கும் அஜித் பார்க்க தமன்னாவின் மாமானார் போல் தோற்றமளிக்கிறார்.
மற்றப்படி அஜித்தின் சண்டைக்காட்சிகளுக்கெல்லாம் யாரும் அசந்த மாதிரி
தெரியவில்லை.
அட… சொல்ல மறந்து விட்டேனே,
எல்லா கமர்ஷியல் படங்களை போலவும், இந்த படத்திலும் அஜித் ஒரு அடிதடி ஆள். எல்லா கமர்ஷியல்
பட நாயகிகள் போலவும் இதிலும் தமன்னாவிற்கு அடிதடி என்றாலே பிடிக்காது…
உவ்வே…
படத்திற்கு
இசை தேவிஶ்ரீபிரசாத். இவரின் முந்தைய பாடல்களையே, திரும்ப திரும்ப
‘பீட்’ மாற்றி போட்டு, நான்கைந்து
பேரை லபோ லபோ என கத்தவைக்கும் பழக்கத்தை இவர் விட்டால் தான், நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறையும். இவரை பற்றி போதுமானளவு,
முந்தைய விமர்சங்களிலே துவைத்து தொங்க போட்டும் திருந்தாத காரணத்தால்,
அடுத்த்தாக சில நடன இயக்குநர்களை பார்க்கலாம்.
அஜித்திற்கு
நடனம் வராது தான், ஒத்து கொள்கிறோம். கிழக்கிந்திய கம்பெனிகள் இந்திய திருநாட்டில்
அடியெடுத்த வைத்த நாளன்று, அஜித்திற்கு ஆன ஒரு ஆக்ஸிடன்ட்டை காரணமாக
வைத்து இன்று வரை அவர் டான்ஸ் மாஸ்டர்களை டபாய்க்கிறார் என்பதையும் ஒத்து கொள்கிறோம்.
அதற்காக மெக்கானிக் ஸ்பேனர் திருகவது, பிசியோதிரபி
எக்சர்சைஸ்கள் போன்று எல்லாம் ஸ்டெப் வைத்தால்
என்னாகும் என்று யோசிக்க வேண்டாமா? பாடல் காட்சிக்கு தம்மடிக்க
வெளியே போனவர்கள் எல்லாம் தியேட்டரினுள் எழும் சிரிப்பு சத்தத்தை கேட்டு, சிகரெட்டும் கையுமாக திரையரங்கினுள் நுழைந்து விட்டனர். அரங்கு முழுவதும் சிகரெட் நாற்றம். அவர்களிடம் போய்
“இது மிகவும் கொடிய நோய்” என்றா சொல்லி கொண்டிருக்க
முடியும். காது மேலயே போட மாட்டார்களா?
வில்லன்
வசம் இருக்கும் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு நல்லது
செய்வதற்காகவே, அஜித் காய்கறி மார்க்கெட்டை குத்தகைக்கு எடுக்கிறார், ரேஸ் கார் ஓட்டி திரிந்து கொண்டிருந்தவர் தமன்னாவிற்காக மாடு ஓட்டுகிறார்,
தனக்கு கீழ் வேலை செய்த வேலைக்காரனுக்கு கல்யாண பரிசாக அவனுக்கு காய்கறி
மார்க்கெட்டில் ஒரு போர்ஷனை ஒதுக்கி கொடுத்து அவனை முதலாளி ஆக்குகிறார்… இப்படியே அவர் நல்லவர் என நிரூபிப்பதற்காக அதையும், இதையும்
செய்து கொண்டே இருக்கிறார். நமக்கோ இன்டர்வெல் எப்ப டா விடுவீங்க
என தவியாய் தவிக்கிறது. எவ்வளவு நேரம் தான் சாப்பிடாமல் அடி தாங்குவது…
பொண்ணுக்கு
அப்பாவாகவே நடித்து நடித்து அலுத்து போய்,
கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கி
சென்று, சமீபகால படங்களில் வெரைட்டி வெரைட்டியாக வலம் வந்த நாசரை,
மயக்க மருந்து போட்டு கடத்தி வந்து தமன்னாவிற்கு அப்பாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அஜித்தை பற்றி தமன்னா, தன் அப்பாவிடம் தொலைபேசியில்
எடுத்து சொல்லி, அஜித்தை காதலிச்சிக்கிட்டுமா என பெர்மிஷன் கேட்க,
ஆளு எப்படிம்மா என நாசர் கேட்க, செம்ம வொய்ட் ப்பா
என தமன்னா சொல்ல, அஜித்தின் தலை முதற்கொண்டு வொய்ட்டாக தான் இருக்கும்
என்ற விஷயம் தெரியாமல், நாசர் செம்ம குஷியாகி அவரை ஊருக்கு கூட்டிட்டு
வாம்மா என சந்தோஷமாக அழைப்பு விடுக்கிறார்.
ஊருக்கு
வரும் வழியில், ரயிலில் வைத்து ஒரு சண்டை காட்சி வருகிறது. கிட்டத்தட்ட
சண்டை முடிந்து விட்டது என்ற நினைப்பில், அஜித் ஹீரோயிட்டிக்காக
தமன்னாவை பார்த்து, மாமாவை என்னான்னு நினைச்ச, உன்மேல ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன் டா செல்லம் என சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,
அந்த வழியாக பறந்து வந்த ஒரு கோடாரி லைட்டாக தமன்னாவை ஸ்க்ராட்ச் செய்து
விட்டு, மலேசியா நோக்கி போகிறது. அஜித்
தமன்னாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடுகிறார்.
வந்தது
இன்டர்வெல்… கோட்டான கோட்டி நன்றிகள் யேசப்பா…. கோட்டான கோட்டி நன்றிகள்…
முக்கால்வாசிக்கும்
மேலான தமிழ் திரைக்காவியங்களின் இடைவேளைகள் சண்டை காட்சிகளோடு முடிவதால், இடைவேளை முடிந்து வரும்
சீன் ஹாஸ்பிட்டல் சீனாக தான் இருக்கும் என்ற அளவிற்கு தமிழன் லாஜிக்கில் கில்லியாக
இருப்பதால், கேண்டீன் போன மொத்த ஜனமும், 5 நிமிஷம் தாமதமாகவே வந்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் சிரிப்புமிக்க
சில வடிவேல் காமெடிகளை மிஸ் செய்த துரதிர்ஷ்டசாலி ஆகிவிட்டார்கள் என்று நினைக்கையில்,
கொஞ்சம் ஜாலியாக இருந்தது. “இருப்பா ஒரு பொசிஷனுக்கு
வந்துக்குறேன்” என்ற மருதமலை காமெடியை, அஜித்தே நம்மை மகிழ்விக்க நமக்கு பெர்ஃபார்ம் பண்ணுகிறார். அநேகமாக அது அஜித் வடிவேலுவிற்கு கொடுக்கும் ட்ரிபூட்டாக தான் இருக்கக்கூடும்.
அது போக மற்றுமொரு க்ளாஸான வடிவேல் காமெடியையும், அஜித் நமக்காக ட்ரிபூட் செய்கிறார்… மனுஷன்னா,
நீ தான் யா மனுஷன்…
என்னா
டா இவன், கதையையே
சரிவர சொல்ல மாட்டேங்கிறானே என நீங்கள் அலுத்து கொள்வது புரிகிறது.
முன்பே சொல்லியிருக்கேன் அல்லவா… க்ளாஸிக்…
க்ளாஸிக்… விமர்சனம்… விமர்சனம்….
ஆர்ட டைரக்ஷன் நேர்த்தியாக இருந்தது.
சினிமெட்டோகிராபி ஃப்ரெஷாக இருந்தது. படத்தொகுப்பு பக்காவாக இருந்தது. (என்னது… அப்படின்னா என்னாவா….? எல்லாரும் சொல்றதை தானே நானும் சொல்றேன், இவங்களோட
மல்லுக்கட்டாத டா சூனாபானா, அடுத்த பத்திக்கு ஓடிடு…)
தமன்னாவிற்கும், நாசருக்கும் அடிதடி என்றாலே
ஆகாது. ஆனாலும் தமன்னாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அஜித்,
தமன்னாவிற்காக அடிதடிகளை கைவிடுகிறார். ஆனாலும்,
நாசர் மீது இருக்கும் பகையால், வில்லன் கும்பல்
நாசரை அழிக்க நினைக்கிறது. அவர்கள் அத்தனை பேரையும் அஜித் சமயோகிதமாக
(சமயோஜிதமா… சமயோகிதமா… ஐயையோ
தெர்லயே…) சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில்,
அஜித் ஒரு ஃபைட்டு பார்ட்டி என நாசரின் குடும்பத்திற்கு தெரிய வரவே,
எல்லோரும் ஒட்டு மொத்தமாக அஜித்தை அன்ஃப்ரெண்டு செய்து விடுகிறார்கள்.
அதன்பின், படத்தின் பிரதான வில்லனே அஜித்தை பற்றி
நல்லவிதமாக நாசரிடம் எடுத்து சொல்லவே, நாசர் அஜித்தை ஃப்ரெண்டு
லிஸ்ட்டில் இணைத்து கொள்கிறார். இதான் யா படம், கதையை சொல்லிட்டேன் போதுமா…
இப்ப புடி
டா இலக்கிய தரத்தை…
ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியையும், பெருவாரியான மக்களுக்குள் ஆழமாக வேரூன்றி படர்ந்திருக்கும் வன்முறையையும்,
வீரம் படம் கேள்விக்குள்ளாக்கி, அதன் வீரியத்தை
ஆழ பதிவு செய்தாலும், இதன் தீர்வாக எந்த ஒரு கருத்தையும் முன்வைத்து
சொல்லப்படாதது படத்தின் பலவீனம்… சாவு டா…
அஜித்
அழகாக ஜொலிக்கிறார், சண்டைக்காட்சிகளில் தெறிக்க விடுகிறார் ஆனாலும் படம் முழுக்க நரைத்த முடியோடு
தோன்றுவது, அஜித்தும் நாசரும் க்ளாஸ்மேட் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
(இதாமுல்ல நடுநிலை, இரண்டு குட்டி ப்ளஸ்,
ஒரே ஒரு பெரிய நெகட்டிவ்… முடிஞ்சது மேட்டர்…
நடுநிலை ரெடி)
இப்போதெல்லாம் 10வது படிக்கும் இளசுகளே,
வீணா காதல் வசனங்களை பேசி, ஒருவருக்கு ஒருவர் டார்ச்சர்
கொடுத்து கொள்ளாமல், ECR பக்கம் ஒதுங்கும் இந்த காலக்கட்டத்தில், அஜித்தும், தமன்னாவும் பேசும் காதல் கத்திரிக்கா வசன்ங்கள் எல்லாம் இடைவேளையின் போது சாப்பிட்ட
கொஞ்சத்தையும் வாந்தி வர வைக்கிறது.
தமன்னா
அஜித்தை காதலோடு திரும்பி பார்த்தாலே,
“பாட்டை கீட்டை போட்ராதீங்க” என்று மனம் அடித்து
கொள்கிறது. இறைவன் எப்போது நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்திருக்கிறான்…!
படம் போகப்போக, தமன்னா அஜித்தை சும்மா பார்த்தாலே,
பாட்டு தானே… பாடிக்கோ போ மா, என்று அனுமதி கொடுக்கும் ஜென் நிலைக்கு வந்து விடுகிறோம்.
படம் பொங்கலுக்கு வெளிவருவதாலோ என்ன எழவோ, ஒரு பாடலுக்கு அஜித், கோட்டுக்கு வேஷ்டி கட்டி வருகிறார்…. கருமம் டா…
படம் பொங்கலுக்கு வெளிவருவதாலோ என்ன எழவோ, ஒரு பாடலுக்கு அஜித், கோட்டுக்கு வேஷ்டி கட்டி வருகிறார்…. கருமம் டா…
இந்த படத்தில்
எனக்கு மிகவும் பிடித்த்து நாசர் தான்.
மாறி மாறி அடிவாங்கி, படாத அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும்
நம்மிடையே, ஆறுதலாக பேசுவது அவர் ஒருவர் தான்…
படம் சூரமொக்கையாக
போய்கொண்டிருக்கும் ஒரு காட்சியில்,
“போய்டுங்கய்யா…. தயவு செய்து இங்கிருந்து போய்டுங்கய்யா”
என நம்மை கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறார்.
இன்னொரு
சீனில் “சக்தி
இல்லைப்பா… எனக்கு இன்னொரு சாவை தாங்கற சக்தி இல்லைப்பா,
தயவு செய்து இங்கிருந்து போய்டு” என்கிறார்.
வேறு ஒரு
சீனில் “என்
குடும்பத்துக்காக தனியா நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கியே…” என நம்மை பார்த்து நெகிழ்ந்து, “நீ நல்லாயிருக்கனும்
பா… நல்லாயிருப்பீங்க” என வாழ்க வளமுடன்
மகரிஷியின் உள் அன்போடு நம்மை வாழ்த்துகிறார்.
இதை விட, ஒரு சிறப்பான நன்றியுரையை
எந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள்…! அப்போது, அதுவரை வலி தாங்காமல் கலங்கிய நமது கண்கள், நெகிழ்ச்சியால்
கலங்க ஆரம்பிக்கிறது…
மொத்தத்தில்
வீரம்… கர்ச்சீப்
ஆச்சு ஈரம்…
ReplyDelete#தல அஜித்தும் விமர்சனங்களும்
அதை சொல்லாமல் சொல்லியடித்து பதிலும்....!!!
உனக்கு வசனமே வராது - என்
கன்களும் வசனம் பேசி விருது வெல்லுமடா #வாலி ...
உனக்கு நடனமே ஆட தெரியாது - நான் ஆடிய பரதம்தான்டா பிலிம் பேர் விருது வாங்கிருக்க #வரலாறு...
நீ குண்டானவன் - நான் நினைத்தால் உன்னை விட ஒல்லியாய் வருவேண்டா #பரமசிவன் ...
மன்றங்களை கலைத்தால் நீ
மறைந்து போவாய் - நான்
மறைந்து போய்விட்டேனா என்று என் ரசிகனை கேட்டு பாருடா...
நீ உடல்வாகே இல்லாதவன் - இந்த
உடல்வாகு போதுமா தம்பி #ஆரம்பம் ...
கோட் சூட் தவிர எதுவும்
உனக்கு செட் ஆகாது - இந்த கெட்டப்ல் என்னை தவிர
வேறயாருடா நடிங்கனு சொல்லு #வீரம் ...