முன்
குறிப்பு : 21 வயதினருக்கு மேலோனவர்கள் மட்டும் படிக்க…. Has sex contented writings
நேற்று
ஓர் சமூக வலைத்தளத்தில் ஓர் செக்ஸ் போஸ்டரை கண்டவுடன், எனக்கு உண்மையில் ஆச்சர்யம் ஆகி போனது, இது போல் போஸ்டர்கள் எல்லாம் ஏன் சமூக வலைதளத்தில் இருக்கிறது என்பதை குறிப்பிட்டு நேற்று ஓர் பதிவு போட்டிருந்தேன். அதை பலரும் கண்டு கொள்ளவில்லை, சிலர் மட்டும், என்னை அது போல் போஸ்டர்களை கண்டு கொள்ளவேண்டாம் என்ற தோரணையில் எனக்கு அறிவுரை புகட்டினார்கள். ஒரே ஒருவர் மட்டும், அந்த பதிவை கண்டு, அது குறித்து வருத்தப்பட்டதாக அறிந்தேன். மேலும் அவர் தகுந்த இடத்தில் அது குறித்து பேசியதாகவும் அறிந்தேன். ஓர் ஆணாகிய எனக்கு இருக்கும் தார்மீக கோபம் கூட, எப்படி அந்த சமூக வலைத்தளங்களை பார்க்கும் பெண்களுக்கு கூட இல்லாமல் போகிறது என்பது குறித்து வருத்தமடைந்தேன்..
நமக்கு
ஏன் வம்பு, நாம் ஒருவர் சொல்லி என்ன ஆக போகிறது, சொன்னா மட்டும் திருந்திட போறாங்களா… என்பதெல்லாம் நம் நாட்டில் உள்ள எல்லோரது எண்ணங்களிலும் ஆழ பதிந்து விட்டது. இந்த எண்ணங்களின் தாக்கம், நாளை அது நம்மையே பாதிக்கும் என்றாலும் கூட, அது குறித்து நாம் செயலாற்றுவதில்லை. சொல்ல போனால், அவலங்களை கண்டு கொள்ளாமல் இருக்க நம்மை நாமே பழக்கி கொண்டோம். இதனால், மிக எளிதில் தீர்வு காணக்கூடிய எத்தனையோ சிறிய விஷயங்களுக்கு கூட செயலாற்றாமல் முடங்கி நிற்கிறோம்… இதை நாம் நமது வாழ்க்கை முறையாக மாற்றி கொண்டோம், நம் பிள்ளைகளுக்கும் இது போல் இருக்கவே வழிகாட்டுகிறோம்.
கலைஞர்
டிவியில், மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டு வருகிறது. அடிப்படையில் இது ஓர் நடன நிகழ்ச்சி, டிவி நட்சத்திரங்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும். இது என்ன வகையிலான நியாயம் என்று தெரியவில்லை, ஆனால் நாம் அவர்களிடம் நியாயம் கேட்கும் பட்சத்தில், டிவி நட்சத்திரங்களை காட்டும் பட்சத்தில் தான், அதிக நபர்கள் பார்ப்பார்கள் என்று அவர்கள் பதில் அளிக்க கூடும் என நம்புகிறேன். அந்த வகையில், அங்கேயே அது பணத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்றும், தேர்ந்த நடன கலைஞர்களை தேர்ந்தெடுப்பது அவர்கள் நோக்கம் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன், எந்தெந்த வயதினர் இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு எந்த வகையான எச்சரிக்கையும் நமக்கு அளிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், ஆணும் பெண்ணும் நடனமாடி கொண்டே இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டனர். இது போல் நிகழ்ச்சிகளை எப்படி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.
வேறொரு,
மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது, நடன கலைஞர்கள் அணிந்து வந்த உடைகளில் பெண்களின் உடை மட்டும் மிகவும் இறுக்கமாகவும், ஆண்களின் உடை சாதரணமாகவும் இருந்தது. இது ஓர் அடல்ட்ஸ் ஷோவாக இருந்தாலும் கூட இது எப்பேற்பட்ட அநீதி… ஆண்களுக்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல், வழக்கமாக நடன கலைஞர்கள் ஆடும் போது, அதை பல்வேறு கேமராக்களில் பதிவு செய்வது வழக்கம். அந்த கேமராக்களில் பதிவு செய்த்தை தொகுத்து அதன் பின் தான் டிவியில் ஒளிபரப்புவார்கள். நான் பார்த்த ஷோவில், அந்த பெண் குனிந்து குனிந்து கவர்ச்சிகரமாய் ஆடியதை மட்டும், க்ளோஸ் ஷாட்டில் இருக்கும் கேமராவில் காண்பிக்கப்பட்டது. மற்ற படி, சாதாரணமாக ஆடிய போதெல்லாம் லாங் ஷாட்டில் காண்பிக்கப்பட்ட்து. இன்னொரு விஷயம், அவர், நடன அசைவுகளை மறந்து வெறுமனே சில இடங்களில் நின்றார், அப்போதெல்லாம் லாங் ஷாட்டில் இருந்து ஜூம் போய், பிற நடன கலைஞர்களை மட்டும் காட்டப்பட்டது… ஆக நடனம் ஆடி திறமை காட்டுவதென்பதெல்லாம் வெறும் பிதற்றல்.
இது
போல் அயோக்யத்தனமான ஷோ தான், சீசன் முடிந்து சீசனாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் எதிர்ப்பு தெரிவித்த மாதிரியோ, தட்டிக்கேட்ட மாதிரியோ ஏதும் தெரியவில்லை. அரசியல் தலைவர் இராமதாஸ் மட்டும் ஒரு முறை அந்நிகழ்ச்சியை மானாட மார்பாட என்று நக்கலடித்ததாய், நண்பர் ஒருவர் சொன்னார். ஆனால் அவர் மீது பல்வேறு விமர்சங்கள் இருப்பதால், அவர் சொன்னதால் எந்த வகையான எழுச்சியும், மாற்றமும் வந்து விடவில்லை. இன்னமும் முகம் சுளிக்க வைக்கும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. எல்லோரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து விட்டார்கள் போல் இருக்கிறது, கெட்டதை விடுத்து நல்லதை எடுத்து கொள்கிறார்களாம்.
இங்கு
யாரும் செக்ஸிற்கோ, க்ளாமருக்கோ எதிரி இல்லை. அதற்கென ஓர் தளம் இருக்க வேண்டும் என்பதை தான் நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இங்கே பலர், இது நமக்கு தொடர்பு இல்லாத ஓர் இடம் என்று இது போன்ற விஷயங்களுக்கு காது கொடுக்க மறுக்கிறார்கள். ஏனெனில் செக்ஸ் சார்ந்த பேச்சுக்கள் கேட்பது, பார்ப்பது, சொல்வது எல்லாமே இப்போது ஓர் தீட்டாகி விட்டது. இது பற்றி கொஞ்சம் கொச்சையாக/ வல்கராக/ அசிங்கமாக/ உபயோகமாக பேசலாம் என்று இருக்கிறேன். பசி எடுத்தால் சாப்பிடுவதில் இருக்கும் இயல்பும் எதார்த்தமும், காமம் வந்தால் தீர்த்து கொள்வதில் இருப்பதில்லை. குழந்தையாய் இருக்கும் போது குழந்தையாய் வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்றும், இளமையாய் இருக்கும் போது தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் பல மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அப்படி 100ல் ஒருவர் தவறும் பட்சத்தில், அது 100 பேருக்குமே பிரச்சனையையே கொடுக்கும்.
கார்ட்டூனிஸ்ட் மதன்
அவர்கள் “மனிதனும் மிருகமும்” என்ற புத்தகத்தில் இது பற்றி விரிவாக கூறியிருக்கிறார். பெரும்பாலான சைக்கோக்கள், சீரியல் கில்லர்கள், வுமன் பீட்டர்கள் தன் சுயவிவரங்களை டாக்டர்களிடம் கூறுகையில், தான் குழந்தையாய் இருக்கும் போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் தான் இளமை காலங்களில், தனக்கு தேவையான காமம் கிடைக்கவில்லை என சொல்கிறார்கள். குழந்தையாய் இருக்கும் போது குழந்தைத்தனத்தை தொலைத்தவர்களும், இளமை காலங்களில் இளமையை தொலைத்தவர்களுமே வரலாற்றில் இந்நாள் வரை சைக்கோக்கள் ஆகவும், சீரியல் கில்லர்களாவும் உருவெடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் பல சிறு குழந்தைகளை வெட்டி புதைத்த சைக்கோ கூட, தன் இளமை காலத்தில் child sex க்கு ஆளாக்கப்பட்டதை விவரிக்கிறான்.
இப்போது,
மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்கும் போதும், குழந்தைகளிடத்து பாலியல் குறித்து எந்த எச்சரிக்கைகளும் பெற்றோர்கள் செய்யாமல் விடும் பட்சத்தில்,
இரண்டு விஷயங்கள் நடக்க கூடும். ஒன்று, உங்கள் குழந்தையை யாராவது child sex க்கு உட்படுத்தும் போது, அது என்ன செய்வதென்பதை அறியாது அவன் மிரட்டலிற்கு உடன் பணியக்கூடும். மற்றொன்று மிக சிறிய வயதிலே காதலில் விழக்கூடும்.
எழுத்தாளர்
சிவசங்கரி கூட சமீபத்தில் child sex குறித்து ஆனந்த விகடனில் ஓர் சிறுகதை எழுதினார். ஓர் குழந்தையை ஐஸ் க்ரீம் ஆசை காட்டி ஓர் கார் ட்ரைவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விட்டதால், அந்த குழந்தை பெரிய பெண்ணாக மாறி, அவள் திருமணத்திற்கு பின்னும் அவளுக்கு செக்ஸ் என்றாலே அருவருப்பை வரவழைக்கும், அதனால் அவள் கணவன் அவளை நிராகரித்து விட்டு, வேறு ஓர் திருமணம் செய்து கொள்வான். இவள் வாழ்நாள் முழுதும், இவளது அம்மா வீட்டிலே துயரத்தில் கிடப்பாள். அந்த வாழ்நாள் துயரத்திற்கெல்லாம் ஒரே ஓர் சம்பவம் மட்டுமே காரணம் என்பது எத்தனை கொடுமையானது… இந்த கொடுமையெல்லாம் நினைத்து பார்க்கவே கொடூரமானது, இதை எடுத்து சொல்லும் போதும், அதை நமக்கான எச்சரிக்கையாக எடுத்து கொள்ளாமல், ஏன் சாக்கடையை பார்க்கிறாய், தாமரையை பார், சூர்யோதயத்தை பார், வென்பனியை பார்… அது எத்தனை அழகானது என்று மறுமொழி சொன்னால், நான் என்னவென்று சொல்ல…?
மிக
சிறுவயதில் காதலில் விழும் குழந்தைகளை நீங்கள் வாழ்நாளில், எந்த சந்தர்பத்தின் போதும் சந்தித்து இருக்கிறீர்களா… நீங்கள் என்ன சொன்னாலும் அக்குழந்தை பெரியவர்கள் போல் பேசும், தான் காதலித்தவன் நல்லவன் என வாதாடும், வெளிநாடுகளில் பெற்றோர்க்கு எதிராகவே புகார் கொடுக்கும், ரெண்டு அடி அடித்து கட்டுக்கு கொண்டு வரலாம் என எத்தனித்தால் வீட்டை விட்டு ஓடி போகும்….
பெரியவர்களை
பொறுத்த வரை, காமம் என்பது இந்தியாவில் ஆண்களின் முழு ஆதிக்கமாக இருக்கிறது என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறி வருகிறார். காலையில் எழுந்தால் பல் விளக்குவது போல், இரவு ஆனால் ஆண்கள் செக்ஸ் வைத்து கொள்கிறார்கள். மனைவிக்கு உடன்பாடே இல்லையென்றாலும் கூட அவன் அதை சட்டை செய்ய மாட்டான். செக்ஸ் என்பது ஒரு காலத்தில் கலைநயமாக போற்றப்பட்டது. இப்போது அது எந்த உணர்வும் இல்லாமல் வீட்டுக்கு வீடு நடக்கிறது.
எல்லாவற்றையும் விட
கொடுமை என்னவென்றால், மனதில் காதல் என்பது இல்லாமலே செக்ஸ் வைத்து கொள்கிறார்கள். கணவனும் மனைவியும் பேசி கொள்ள மாட்டார்கள், சிரித்து கொள்ள மாட்டார்கள், எங்கேயும் சகஜமாக வெளியே போக மாட்டார்கள், ஆனாலும் அவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்வார்கள். இது போல் அவலங்கள் தான் மனிதனை கள்ள காதலை நோக்கி தள்ளுகின்றன. பெரும்பாலான விலைமாதர்களிடம் வரும் கஸ்டமர்கள், திருமணமானவர்கள்.
கொருக்குப்பேட்டையில் ஓர் கள்ள காதல் விவகாரத்திற்காக, இரண்டு மாத குழந்தையை அடித்து கொன்றிருக்கிறார்கள். திருமண உறவு கசந்ததற்காக கணவனின் சகோதரரை ஆரம்பத்தில் அணுகி வந்தார். ஆனால் பிற்பாடு குழந்தை பிறந்த பின், மனம் திருந்தி வாழ, அப்பெண் முடிவெடுத்ததை சகித்து கொள்ள முடியாமல், அவளின் கள்ள காதலன், அக்குழந்தையை அடித்தே கொன்று விட்டான். பெரும்பாலான பெண்கள் orgasm என்னும் உச்சநிலையை தனது காமத்தின் போது அடைவதில்லை, அதற்குள் ஆணுக்கு அடங்கி விடுகிறது. அவள் ஒவ்வொரு இரவும் ஏமாற்றமே அடைகிறாள். அதுவே அவளை இன்னோர் ஆணை தேட செய்கிறது. நிச்சயமாக இதற்கு காரணம் பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும் தான் குற்றவாளி….
ஆனால்
zee tv யில் நடக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, தொடந்து கள்ளகாதல் விவகாரங்களை கையாள்கையில், கள்ளகாதலர்களை மட்டுமே குற்றவாளியாக சித்தரிக்கிறது.
பார்ப்பதற்கு
எல்லாமே சிறிய விஷயம் போல் தான் இருக்கும்.. ஆனால் அது ஏற்படுத்தும் வீரியம் என்பது தாங்கி கொள்ள முடியாதது…
White tiger நாவலில், அரவிந்த் அடிகா மொத்த இந்தியாவையும் காறி உமிழ்கிறார். என்ன அநியாயம் நடந்தாலும் பொறுத்து கொண்டு, குற்றவாளியை அனுமதிக்கும் கேடு கெட்ட நாடு இந்த இந்தியா என்று ஏளனம் செய்கிறார்.
இன்னும்
எத்தனை நாள் இதே போல் இருக்க போகிறோம்…
No comments:
Post a Comment