Thursday, 11 July 2013

சிங்கம் 2 - விமர்சனம்





ப்ரைமரி ஸ்கூலில் பணி புரியும் டீச்சரையோ, பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரியும் லெக்சரரையோ, ஹை ஸ்கூல் வாத்தியாரையோ யாரும் எங்கும் பார்க், பீச் போன்ற இடங்களில் கடலை போட்டு கொண்டு இருப்பதை பார்க்க முடியாது, அதுவும் தூத்துக்குடி போன்ற சிறிய டவுன்களில்ஆனால் NCC வாத்தியாரான துரைசிங்கம் சூர்யா, அஞ்சலியுடன் குத்து பாட்டு பாடிக்கொண்டே எண்ட்ரி கொடுக்கிறார்பாட்டின் சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே, கொஞ்ச நேரம் இடைவெளி கிடைக்கும் அல்லவாஅந்த நேரத்திற்குள்ளாகவே, தூத்துக்குடியின் கடத்தல் சமாச்சாரங்களை மொத்தமும் மோப்பம் பிடித்து விடுகிறார். அங்கிருந்து ஆரம்பித்து படம் முடியும் வரை காமெடி ஸீக்வென்ஸ்கள் தான்….செம்ம காமெடி..  (சந்தானம், விவேக் காட்சிகள் தவிர்த்து…)

படத்திலே பாவப்பட்ட ஜீவன் என்றால் அது ஹன்சிகா தான். ஹன்சிகாவை விட படம் பார்க்க சென்ற நாம் தான் பாவப்பட்டவர்கள் என்றாலும், அந்த குட்டி பாப்பா நம்மை காட்டிலும் பாவம். அந்த பாப்பாவை மொக்க தனமாக கொஸ்டீன் பேப்பரை திருட வைத்து, சூர்யாவை லவ் பண்ணுவதற்காக பாக்யராஜ் படங்களின் ஹீரோயின் போல் அறுவையான டெக்னிக்குகளை ஃபாலோ பண்ண வைத்து, சூர்யாவிற்கு வேவு வேலை பார்க்க வைத்து கடைசியில் சாவடித்து போஸ்ட்மார்டம் பண்ணி விடுகிறார்கள். பாவம்சிங்கம் படத்தை ஒரு போஸ்ட் மார்டனிஸம் படமாக்க ஹன்சிகா தான் பெரிதும் உழைத்திருக்கிறார். ஆனால், டைட்டில் கார்ட் போடும் போது சூர்யாவுடன் அனுஷ்கா ஆடுகிறார்என்னே ஒரு அவலம்சேட்டை படத்தில் ஹன்சிகாவிற்கு இழைத்த அநீதியை சிங்கம் படத்திலும் செய்து விட்டார்கள் என்று நினைக்கும் போது தான் நெஞ்சம் பதறி, சிதறி, கதறி அழுகிறதுமாதர் சங்கங்களை கண்டிக்கிறேன்.

ஒரு காட்சியில் School assembly-ன் பொழுது முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறது, இன்னொரு காட்சியில் முழுமையாக தேசிய கீதம் பாடுகிறதுஅப்போதெல்லாம் திரையரங்குகளில் எல்லோரும் உட்கார்ந்தவாறே இருக்கின்றனர். ஏனெனில் எழுந்து நின்றால், அநாயவசியமாக பின்னால் இருப்பவருக்கு மறைக்கும். அந்நேரம் பார்த்து, ஒரு சாவு கிராக்கி தன் பிள்ளையை அடித்ததாற்காக பள்ளி புகுந்து ரௌடித்தனம் செய்கின்றான். சூர்யா உட்பட சகல கூட்டத்தினரும், தேசிய கீதம் முடியும் வரை பல்லை கடித்து கொண்டு attention-ல் நிற்கின்றனர். தேசிய கீதம் முடிந்ததும், சும்மா…. சூர்யா ரௌடிகளை எல்லாம் துரத்தி துரத்தி அடிப்பாரே, அப்படியே என் நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போய் விட்டது. அடித்தது மட்டுமில்லாமல், தேசிய கீதம் பாடும் போது attention-ல் நிற்காததற்காக, அந்த ரௌடியை பார்த்து 4 பக்கத்திற்கு வசனம் பேசுவாரேஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்கு சமமானது, கல்வெட்டுகளில் பொறிக்க வல்லதுஆனால், சூர்யா பேசிய வசனமெல்லாம் அந்த ரௌடிக்கு மட்டும் தானா, இல்லை தியேட்டரில் குத்துக்கல் போல் உட்கார்ந்திருந்த எங்களுக்கும் தானா, என்பது தான் தெரியவில்லை. தெரிந்தால் தற்கொலைகள் தவிர்க்கப்படும்

Kill bill – Green Hornet theme music உடன் மெயின் வில்லன், டேனி எண்ட்ரி ஆகிறார். ஆனால் அந்த அற்புதமான தீம் ம்யூசிக்கிற்கு மேலாகவே ஒரு rap song-ம் ஓடுகிறது. அந்த rap பாடலை, எங்கிருந்து உருவியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அளவிற்கு என் போன்றவர்களுக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் tough கொடுப்பதால், அவரை பிரமாதமான இசை கலைஞர் என்பதை ஒப்பு கொள்ளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். You’ve miles to go, DSP… Copy on…

சினிமாவில் அடி வாங்குவதற்கென்றும், செத்து மடிவதற்கென்றுமே சில காமெடி கதாபாத்திரங்கள் சுற்றும்.
உதாரணம் 1…

டைமண்ட் எங்க இருக்கு…”
சொல்ல மாட்டேன்…”
ஒழுங்கா சொல்லிடு…”
எனக்கு தெரியாது…”
--பளார் பளார்
எங்க வீட்டு பீரோவில தான் இருக்கு…”

உதாரணம் 2…

டேய் கபாலி, உன்னை அழிக்க நிச்சயம் எங்க அண்ணன் வருவான் டா…”
அவன் மட்டும் வந்தான்னா, அவனை கொன்னு கடல்ல வீசிடுவேன்
அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது…”
அப்ப உன்னை கொன்னுட்டு, அவனை கொன்னுக்கிறேன்
--டுமீல் டுமீல்

இந்த இரண்டாவது உதாரணத்தில் வருவது போல், ஒரு ஆஸ்திரேலியன் காமெடி போலீஸ்காரன் செத்து மடிகிறான். ‘உச்கொட்ட தான் தோன்றவில்லை…. இதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்றால், பின் வரும் காட்சிகளில், பிரதான(!) கதாபாத்திரமான ஹன்சிகா இறக்கும் போது கூட, நமக்குஉச்கொட்ட தோன்ற மாட்டேன் என்கிறது.

இந்த படத்தில் உச்சக்கட்ட காமெடியே, சூர்யாவின் மேனரிஸம் தான். எந்த விஷயமென்றாலும் ஸ்மார்ட்டாக செய்வதென்றால், அது நம்ம சிங்கத்திற்கு அறவே பிடிக்காது. பெங்களூரில் இருந்து சென்னை போவதென்றால் கூட ஃப்ளைட்டை பிடித்து போக மாட்டார். பெங்களூரில் இருந்து கோவை ரயில் பிடித்து, ஓசூர் இறங்கி, ஆம்பூர் வரை ஓடி, வேலூர் வரை நடந்து, வேலூரில் இருந்து ரூட் பஸ் பிடித்து, பூந்தமல்லி இறங்கி, போரூர் வரை ஷேர் ஆட்டோ பிடித்து, போரூர் இறங்கி கால் டேக்ஸி பிடித்து வீட்டிற்கு போவார். உள்ளூரில் இருக்கும் கரீம் பாயை கேரளாவில் வைத்து அரெஸ்ட் செய்வதும், வீட்டில் இருப்பவர்களை கொல்வதற்காக அடியாட்கள் வருகிறார்கள் என்ற தெரிந்த போதும் போலீஸ் பாதுகாப்பை வேண்டாம் என்று சொல்லி, மழையில் வைத்து அடியாட்களை நொங்கெடுப்பதும் அந்த ரகம்….. “வாங்கலேஎன்ற கூப்பிட்ட போதே, உஷாராகியிருக்க வேண்டும், ஆனாலும் விதி என்ற ஒன்று இருப்பதை திரையரங்கு சென்று உணர்ந்து கொண்டேன்

எண்டர்டெயின்மென்ட் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது தெரிந்தாலும், என்னால் இதனை சொல்லாமல் இருக்க முடியவில்லை. Short timeல் pick up ஆன ஒரு SUV car, அந்த சிங்கள அடியாள் மீது ஏறும் போது மட்டும், அவன் இரத்தம் கக்கி இறந்து விடுகிறான். ஆனால் ஆளில்லாத ரோட்டில், High Speedல் வரும் SUV கார், சூர்யா மீது ஏற்றப்படும் போது மட்டும், அவருக்கு ஒன்றுமே ஆவதில்லை. காரின் டாப் மீதே அலேக்காக ஏறி சவாரி செய்கிறார். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களை, காலம் கடந்து பார்க்கும் போது, எப்படி நமக்கு நகைச்சுவையாக இருக்கிறதோசிங்கம் படமும் காலம் கடந்து பார்க்கும் போது, எதிர்கால சந்ததியினருக்கு நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று பொது நலன் கருதியே, இது போல் காட்சிகளை வைக்கின்றனர் என்று நினைக்கிறேன். இது போல் காட்சிகள் நிகழ் காலத்திலே நகைச்சுவையாக தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும் பாவம்L

க்ளைமாக்ஸில், ஒரே ஆளாக சூர்யா சென்று டேனியை பிடித்து வருவதெல்லாம்அடேங்கப்பாரகம்…!

மொத்தத்தில், சிங்கம் படத்தில் பாராட்டுவதற்கென்று ஒன்றும் இல்லையென்றாலும், ஒரு முறை பார்க்கலாம். கொஞ்ச நாள் முன்பு, சென்னை பட்டினம்பாக்கத்தில் கப்பல் தரை தட்டியதை நாம் போய் வேடிக்கை பார்த்து விட்டு வரவில்லையா, அதுபோல் பார்த்து வரலாம்.

பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், காதலில் சொதப்புவது எப்படிஎன தொடர்ச்சியாக எண்டர்டெயின்மெண்ட் சினிமாவின் தரம் முன்னேறி வரும் காலக்கட்டத்தில், சிங்கம்-2 வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் ஏறி கம்பீரமாக அமர்ந்திருக்கிறதுவாழ்த்துக்கள் ஹரி


No comments:

Post a Comment